பொது செய்தி

இந்தியா

15 நாடுகளுக்கு ஸ்பீடு போஸ்ட் சேவை மீண்டும் துவக்கம்

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020
Share
Advertisement

புதுடில்லி: 15 நாடுகளுக்கு மீண்டும் ஸ்பீடு போஸ்ட் சேவையை துவக்கி உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனாவின் தாக்கத்தால் இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்பீடு போஸ்ட் சேவையை மீண்டும் அஞ்சல் துறை துவக்கி உள்ளது.

எக்ஸ்பிரஸ் மெயில் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லும் அஞ்சல் துறை, மருந்துகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப பொதுமக்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.


latest tamil news



யுஏஇ, பிரிட்டன், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, மலேசியா, குவைத், சீனா உள்ளிட்ட 15 நாடுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த சேவை கிடைப்பதுடன் மெட்ரோ நகரங்கள் மற்றும் பிரதான நகரங்களில் மாலை நேரம் வரை இந்த சேவை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X