பொது செய்தி

இந்தியா

ஊரடங்கால் இந்தியாவில் 12.20 கோடி பேர் வேலையிழப்பு

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
CMIE, Indians, lost jobs, employees, lockdown, CMIE, Centre for Monitoring Indian Economy, India, lockdown extension, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, indian economy, employees, recession, survey,  வேலையிழப்பு,ஊரடங்கு,இந்தியா

புதுடில்லி: இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்., மாதத்தில் மட்டும் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலையிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

உயிர்கொல்லி கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ.,) ஆய்வு செய்தது.


latest tamil news


ஆய்வில் தெரிய வந்ததாவது: இந்தியாவில் 2019 - 20ம் ஆண்டில், சராசரியாக 40 கோடியே 40 லட்சம் பேர் வேலை செய்து வந்தனர். நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரல் மாதத்தில், 28 கோடியே 20 லட்சமாக வேலை செய்பவர்களின் எண்ணிக்கை சரிந்தது. இதனால் நாட்டில் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறு வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள்.


தமிழகத்தில் அதிக பாதிப்பு


இதில் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்த மாநிலத்தில் ஒன்றாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
08-மே-202008:33:08 IST Report Abuse
natarajan s இந்த கொரோனவால் முறை சாரா தொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் வகையில் அரசு எதாவது ஒரு திட்டத்தை அறிவிக்க வேண்டும். கட்டு மான துறை தலையெடுக்க இன்னும் ஒரு வருடம் ஆகலாம் , உற்பத்தி துறை இன்னும் ஆறு மாதம் ஆகும், service sector தான் இதில் கொஞ்சம் விரைவில் மீளும். இவர்களுக்கான நிவாரணம் இதுவரை அறிவிக்க பட்டது மிக குறைவு.
Rate this:
Cancel
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
07-மே-202021:33:43 IST Report Abuse
 Ravi இதைப்பற்றி எல்லாம் யார் கவலை படுவது...
Rate this:
Cancel
07-மே-202020:54:59 IST Report Abuse
ஆப்பு வீடியோ கான்ஃபரன்ஸ் ல பேசுறவங்க வேலையெல்லாம் நல்லா போய்க்கிட்டிருக்குது. அவிங்க முடக்குன ஆளுங்கதான் பாவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X