ஊரடங்கால் இந்தியாவில் 12.20 கோடி பேர் வேலையிழப்பு| Over 12.2 crore Indians lost jobs during coronavirus lockdown: CMIE | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஊரடங்கால் இந்தியாவில் 12.20 கோடி பேர் வேலையிழப்பு

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020 | கருத்துகள் (4)
Share
CMIE, Indians, lost jobs, employees, lockdown, CMIE, Centre for Monitoring Indian Economy, India, lockdown extension, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, indian economy, employees, recession, survey,  வேலையிழப்பு,ஊரடங்கு,இந்தியா

புதுடில்லி: இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்., மாதத்தில் மட்டும் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலையிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

உயிர்கொல்லி கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ.,) ஆய்வு செய்தது.


latest tamil news


ஆய்வில் தெரிய வந்ததாவது: இந்தியாவில் 2019 - 20ம் ஆண்டில், சராசரியாக 40 கோடியே 40 லட்சம் பேர் வேலை செய்து வந்தனர். நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரல் மாதத்தில், 28 கோடியே 20 லட்சமாக வேலை செய்பவர்களின் எண்ணிக்கை சரிந்தது. இதனால் நாட்டில் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறு வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள்.


தமிழகத்தில் அதிக பாதிப்பு


இதில் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்த மாநிலத்தில் ஒன்றாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X