37 பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020
Share
Advertisement

புதுடில்லி : இந்திய - திபெத் எல்லையில் பாதுகாப்பு படையில் ஈடுபட்ட வீரர்கள் 37 பேருக்கு கடந்த 24 மணிநேரங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டில்லியில் இந்திய - திபெத் எல்லையில் பாதுகாப்பு படையில் ஈடுபட்டு வந்த படைவீரர்கள் 53 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மொத்த படைவீரர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் டில்லி போலீசாருடன் இணைந்து சட்டம் மற்றும் ஒழுங்கு பணியில் ஈடுபட்டனர்.


latest tamil news



பாதுகாப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டநிலையில் பல வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்னும் பலரது பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X