புதுடில்லி: நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பார்லி., சபாநாயகர் ஓம் பிர்லா ஆதிர் ரஞ்சனை நியமனம் செய்து இது குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2020 மே 1 ம் தேதி முதல் 2021 ஏப்.30ம் தேதி வரையில் இப்பதவியில் அவர் நீட்டிப்பார்.
இந்திய அரசாங்கத்தின் செலவினங்களுக்காக பார்லி.,யால் வழங்கப்படும் தொகைகள் , அரசாங்கத்தின் வருடாந்திர நிதி கணக்குகள் மற்றும் சபை முன் வைக்கப்பட்டுள்ள பிற கணக்குள் போன்றவற்றை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது தான் நாடாளுமன்ற பொது கணக்கு குழு.

ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்படும் இந்த குழுவின் தலைவர் பதவி எதிர்கட்சிக்கு வழங்கப்படும். பொது கணக்கு குழு 22 உறுப்பினர்களை கொண்டு்ள்ளது.மக்களவையில் இருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்கள் அவையில் இருந்து ஏழு உறுப்பினர்களும் பதவி வகிப்பர்.
தற்போதைய மக்களை குழுவில் பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் - ஜெயந்த் சின்ஹா, அஜய் (தேனி) மிஸ்ரா, சுதீர் குப்தா, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், சத்ய பால் சிங், சுபாஷ் சந்திர பஹேரியா, விஷ்ணு தயால் ராம், ஜகதம்பிகா பால் மற்றும் ராம் கிருபால் யாதவ். இடம் பெற்றுளனர்.
மேலும் பிற கட்சிகளை சேர்ந்தவர்களான டி ஆர் பாலு, ராகுல் ரமேஷ் ஷெவாலே, ராஜீவ் ரஞ்சன் சிங், பாலஷோவ்ரி வல்லபனேனி மற்றும் பார்த்ருஹரி மஹ்தாப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து ராஜ்யசபாவில் இருந்து ராஜீவ் சந்திரசேகர், சி எம் ரமேஷ், நரேஷ் குஜ்ரால், சுகேந்து சேகர் ராய் மற்றும் பூபேந்தர் யாதவ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது.
ஆதிர் ரஞ்சன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேலும் இவர் ஒருவர் மட்டுமே காங்.,சார்பில் தேர்வு குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE