விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் இன்று நள்ளிரவில் மீண்டும் வாயு கசிவு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருக்கும், தென் கொரிய நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலையிலிருந்து,நேற்று அதிகாலை 'ஸ்டைரீன்' என்ற விஷவாயு கசிந்தது இதனால் ஆர்.ஆர்.வெங்கடாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி,அது, காற்றில் கலந்து, 3 கிலோ மீட்டர் துாரம் பரவியது. இதனால், ஐந்து
கிராமங்கள் பாதிக்கப்பட்டன.வீடுகளில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள்,
மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஆகியவற்றால் 11 பேர் பலியாயினர்.

மேலும் தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள், பாதுகாப்பு உடைகள் அணிந்து பணியில் ஈடுபட்டதால், விஷவாயு
கசிவால் அவர்கள் பாதிக்கப்படவில்லை; விஷவாயு கசிந்ததும் அவர்களுக்கு
தெரியவில்லை.
மீண்டும் நள்ளிரவி்ல் வாயு கசிவு
இந்நிலையில் நள்ளிரவில் மீண்டும் ஆலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டது. தகவலறிந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்ரகள் வாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து 3 கி.மீ. சுற்றளவில் வசித்துவந்த அப்பகுதி கிராமவாசிகள் நள்ளிரவில் வெளியேற்றப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.