கொரோனா விஷயத்தில் மெத்தனம் வேண்டாம் : ஜின்பிங் எச்சரிக்கை

Updated : மே 08, 2020 | Added : மே 08, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
பீஜிங் : ''வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டது என மெத்தனமாக இருக்க வேண்டாம். தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்,'' என, சீன மக்களுக்கு, அதிபர் ஜின் பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். நம் அண்டை நாடான சீனாவில் தான், முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ், கோர தாண்டவாமாடுகிறது.சீனாவில் மட்டும் கொரோனாவுக்கு, 4,633 பேர் பலியாகி
கொரோனா ,மெத்தனம்,: சீன மக்களுக்கு ஜின்பிங் எச்சரிக்கை

பீஜிங் : ''வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டது என மெத்தனமாக இருக்க வேண்டாம். தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்,'' என, சீன மக்களுக்கு, அதிபர் ஜின் பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். நம் அண்டை நாடான சீனாவில் தான், முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ், கோர தாண்டவாமாடுகிறது.சீனாவில் மட்டும் கொரோனாவுக்கு, 4,633 பேர் பலியாகி விட்டனர். 83 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


latest tamil news



வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன அரசு, ஊரடங்கு, சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. இதன் பயனாக, தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. சீனாவில் உள்ளவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவது, முற்றிலும் குறைந்து விட்டது. இதையடுத்து, பெரும்பாலான நகரங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், சீன அதிபர் ஜின் பிங் கூறியதாவது:தனிமைப் படுத்துதல், ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால், அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. வைரஸ் பரவலுக்கு எதிராக நம் எடுத்த நடவடிக்கைள் பெரிய அளவில் பலன் அளித்துள்ளன. தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கருதி, மக்கள் மெத்தனமாகவும், அலட்சியத்துடனும் இருக்க வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக, மற்றவர்களுக்கு பரவலாம். வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. எனவே, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். ஹூபே மாகாணத்தில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படாது. வைரஸ் பரவலை தடுக்க, சீன டாக்டர்களும், சுகாதார அதிகாரிகளும் செய்த சேவை, மறக்க முடியாதது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
15-மே-202005:42:26 IST Report Abuse
ocean kadappa india மெத்தனமாக உடலுக்குள் புகுந்து மனிதரை கொல்லும் மர்ம நொயை பரப்பி விட்டது மில்லாமல் இப்போது குரோனா விஷயத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம் என்ற அறிவுரை வேறு கூறுகிறார். மிகவும் கெட்டிக்காரர்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
08-மே-202018:18:31 IST Report Abuse
Tamilnesan டிரம்ப் இவ்வளவு பேசுகிறாரே. உலகத்தில் எங்கு எது நடந்தாலும் அமெரிக்கா மூக்கை நுழைக்கிறதே. சீனா மீது கடுமையான பொருளாதார தடை விதிக்க ஏன் தயங்குகிறார். ராணுவ நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறார்? அங்கு தான் உள்ளது சூட்சமம். அமெரிக்காவின் குடுமி சீனா கையில் உள்ளது.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
08-மே-202015:15:10 IST Report Abuse
Vivekanandan Mahalingam சீன அரசு நினைத்ததை நடத்தி விட்டது . உலக பொருளாதாரத்தை சீரழித்து விட்டது. இப்போது அறிவுரை கூற ஆரம்பித்துள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X