ஸ்ரீதியாக ப்ரம்மத்தை இழிவுபடுத்துவதா? கமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

Updated : மே 09, 2020 | Added : மே 08, 2020 | கருத்துகள் (290)
Advertisement
திருவாரூர்: 'ஸ்ரீ தியாகராஜரை பற்றி இழிவாக பேசிய நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா கமிட்டி தலைவர், முனைவர் ஆர். ராமசுப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: இசை உலகின் மாமேதை, 17, 18ம் நுாற்றாண்டுகளில் வாழ்ந்த, ஆயிரக்கணக்கான சங்கீத வித்வான்கள், இசை கலைஞர்களுக்கு ஒளிவிளக்காக விளங்கியவர், சத்குரு
kamal,kamalhaasan,கமல்,கமல்ஹாசன்

திருவாரூர்: 'ஸ்ரீ தியாகராஜரை பற்றி இழிவாக பேசிய நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா கமிட்டி தலைவர், முனைவர் ஆர். ராமசுப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: இசை உலகின் மாமேதை, 17, 18ம் நுாற்றாண்டுகளில் வாழ்ந்த, ஆயிரக்கணக்கான சங்கீத வித்வான்கள், இசை கலைஞர்களுக்கு ஒளிவிளக்காக விளங்கியவர், சத்குரு ஸ்ரீ தியாகராஜர். தனக்கு வந்த அரசவை பதவியையே வேண்டாம் என மறுத்து, இசைக்காக சேவை செய்த மகான் அவர்.

இத்தகைய பெருமை வாய்ந்த, தியாக ப்ரம்மத்தை, சினிமா நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன், 'தியாகராஜரை போல் நான் பிச்சை எடுக்க விரும்பவில்லை' என கூறியிருப்பது, ஆன்மிகவாதிகளையும், சங்கீத வித்வான்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த, 173 ஆண்டுகளுக்கு முன், சமாதி அடைந்துவிட்ட ஒரு மகானை, 'பிச்சை எடுத்தார்' என, கொச்சைப்படுத்தி இழிவாக பேசிய கமல்ஹாசன், தகுந்த விளக்கமளிப்பதுடன், தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

ஸ்ரீ தியாகராஜர் ஒருபோதும் வறுமையில் வாடியவர் அல்ல. பாகவத தர்மத்தை பின்பற்றியதால், அவர் உஞ்சவிருத்தி எடுத்தாரே தவிர, சோற்றுக்காக அவர் பிச்சை எடுக்கவில்லை. பிச்சை எனும் சொல்லுக்கும், உஞ்சவிருத்தி எனும் சொல்லுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. கமல்ஹாசனுக்கு இதுகூட தெரியாமல் இருப்பது வருத்தப்பட வேண்டியது. நடிகர் கமல்ஹாசன், இந்த தவறுக்காக நிச்சயம் வருந்தி, மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news
வாசன் வருத்தம்:


திருவையாறு ஸ்ரீதியாக ப்ரம்ம மகோத்ஸவ சபா நிர்வாகக்குழு தலைவர், ஜி.கே. வாசன் அறிக்கை: உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல. அது ஒரு பாகவத தர்மம். இது, கமலுக்கு தெரிய நியாயமில்லை. கழுத்தில் ஒரு செம்புடன் கீர்த்தனைகள் பாடி வரும் மகான்களுக்கு, மக்கள், தானியங்களை அளிப்பர். செம்பு நிறைந்த உடன், அந்த தானியத்தில் உணவு தயாரித்து, சுவாமிக்கும் படைத்து, பக்தர்களுக்கும், சிஷ்யர்களுக்கும் பகிர்ந்தளித்து உண்பர். அடுத்த நாளைக்கு கூட சேர்க்க மாட்டார்கள்.

இப்படி, ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்த மகான், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். அவரை பற்றி, ஒரு பேட்டியின் நடுவே, போகிற போக்கில், 'பிச்சை எடுத்தார்' என, கமல்ஹாசன் பேசியுள்ளார். மிக அதிகமான சீடர்களை கொண்ட தியாகராஜ சுவாமிகள், கலையை கற்றுக்கொடுக்க எந்தவிதமான குருதட்சணையும் பெற்று கொள்ளாமல், சிஷ்யர்களுக்கு, உஞ்ச விருத்தி மூலம் வந்த தானியங்கள் கொண்டு உணவும் அளித்தவர். எனவே, கமல்ஹாசன் தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (290)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-மே-202010:14:06 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதுதான் தசாவதாரத்துக்கு அடுத்த அவஸாரம் பேக்காவதாரம் , VVVVVVVVIP ஆயிட்டால் எதையும் உணரலாம் என்று எண்ணம்
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
14-மே-202019:19:08 IST Report Abuse
dina cinema kuuthatikku theriyuma guruwin perumai
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
14-மே-202005:15:42 IST Report Abuse
meenakshisundaram arppa padhar ??
Rate this:
Srinivasan Ramaswamy - CHEN NAI,இந்தியா
14-மே-202017:09:34 IST Report Abuse
Srinivasan Ramaswamypaithiakaran eppadi mannippu ketpan. Kazhudaikku theriyuma karpoora vasanai????????????...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X