சரக்கு ரயில் மோதி 14 வெளிமாநில தொழிலாளர்கள் பலி| 14 migrant workers mowed down by goods train in Maharashtra | Dinamalar

சரக்கு ரயில் மோதி 14 வெளிமாநில தொழிலாளர்கள் பலி

Updated : மே 08, 2020 | Added : மே 08, 2020 | கருத்துகள் (24) | |
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 14 பேர் உயிரிழந்தனர்.மஹாராஷ்டிர மாநிலத்தில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கி கொண்டனர். அவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்ட போதும், பலர் விரைவாக சொந்த ஊர் செல்ல வேண்டும் என்பதற்காக நடந்தே
மும்பை, சரக்குரயில், வெளிமாநிலதொழிலாளர்கள், மஹாராஷ்டிரா, ம.பி., மத்தியபிரதேசம், பலி, உயிரிழப்பு, migrant workers, goods train, Maharashtra, mumbai

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கி கொண்டனர். அவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்ட போதும், பலர் விரைவாக சொந்த ஊர் செல்ல வேண்டும் என்பதற்காக நடந்தே செல்கின்றனர். அந்த வகையில், ம.பி.,யை சேர்ந்த தொழிலாளர்கள், ரயில் தண்டவாளத்தை ஒட்டி , மஹாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்றனர்.


latest tamil news
இரவு நேரத்தில் அவர்கள் தண்டவாளத்திலேயே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 5: 15 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று அவர்கள் மீது ஏறியது. இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த ரயில்வே மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X