நியூஜெர்சி: அமெரிக்கா, நியூஜெர்சி, நியூ பிரன்ஸ்விக் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு ஒரு தமிழர் இலவசமாக 100 பாக்கெட் பிரியாணி வழங்கினார்.

நியூயார்க்கிலும் நியூஜெர்சியிலும் அஞ்சப்பர் உணவகத்தை நடத்தி வருபவர் கண்ணன். கொரோனா காரணமாக அமெரிக்காவிலும் பல பகுதிகளில் லாக் அவுட் நடைமுறையில் இருக்கிறது. தற்போது பிரன்ஸ்விக் மற்றும் பிரின்ஸ்டன் பகுதிகளில் உள்ள அஞ்சப்பர் உணவகங்கள் திறக்கப்பட்டு பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரன்ஸ்விக் ராபர்ட் வுட் ஜான்சன் ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு, அஞ்சப்பர் உணவகம் சார்பாக இலவசமாக 100 கோழி பிரியாணி பாக்கெட்டுகளை கண்ணன் வழங்கினார். பிரியாணிக்குத் துணையாக உருளைக் கிழங்கு, பீன்ஸ் பொறியல், வெங்காய ரைத்தா வழங்கப்பட்டது.

உணவக ஊழியர்கள் பிரன்ஸ்விக் பகுதிக்கு நோய்த் தொற்று காரணமாக செல்ல பயந்ததால், கண்ணனே 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பிரியாணி பாக்கெட்டுகளைக் கொண்டு சென்று வழங்கினார். கண்ணனுக்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர். அதற்கு பதில அளித்த கண்ணன், “நீங்கள் ஆஸ்பத்திரியில் அற்புதமாக பணியாற்றி வருகிறீர்கள்; நாங்கள்தான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்” என்றார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE