பொது செய்தி

தமிழ்நாடு

சீன நிறுவனங்களை ஈர்க்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

Updated : மே 09, 2020 | Added : மே 08, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
சீன நிறுவனங்கள், தமிழக அரசு, வாய்ப்புகள்,

தமிழக அரசு, ஒரு புறம் கொரோனா பரவலைத் தடுக்க, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மறுபுறம், சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை, தமிழகத்திற்கு இழுப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளது.

இதற்காக, பிரத்யேக குழு ஒன்றையும், தமிழக அரசு அமைத்துள்ளது. சாதாரணமாக, ஒரு நாட்டில் உள்ள நிறுவனத்தை இழுக்க வேண்டுமென்றால், துாதரக அளவிலான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்நிலையில், உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அன்னிய நிறுவனங்களை இழுக்க, தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது. பன்னாட்டு நிறுவனங்களும், கொரோனாவால் பாடம் கற்றுக் கொண்டன.

தயாரிப்புச் செலவு குறைவாக உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக, சீனாவில் தொழில் துவங்கியது மிகப் பெரிய தவறு என்பதை, அந்நிறுவனங்கள் புரிந்து கொண்டன.அதனால், சீனாவுக்கு மாற்றாக, வேறிடத்தில் தொழில் துவங்குவது குறித்து, அவை பரிசீலிக்கத் துவங்கி விட்டன. அந்நிறுவனங்கள் தொழில் துவங்க, இந்தியா தவிர்த்து, வியட்நாம், கொரியா, தைவான் உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன. ஆனால் அந்நாடுகளை விட, இந்தியாவிடம் உள்ள சில சாதகமான அம்சங்கள் தான், பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க துணைபுரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வாகனம், உதிரிபாகங்கள், பொறியியல் சாதனங்கள், பிளாஸ்டிக், மின்னணு கருவிகள், ஜவுளி ஆகியவற்றின் பிரதான தயாரிப்பு மையமாக, இந்தியா விளங்குகிறது. அதனால், இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு, தயாரிப்பு பிரிவை மாற்றலாம். ஆனால், அதுவும் சுலபமாக இராது. சீனா, பன்னாட்டு நிறுவனங்களை இழக்க விரும்பாது. நிறுவனங்கள் வெளியேறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை, சீனா ஏற்கனவே துவக்கி விட்டது. அத்துடன், துாதரக அளவிலும் இந்தியாவுக்கு, சீனா அழுத்தம் கொடுக்கும். பதிலுக்கு, சீனாவிடம் இருந்து, அதிக அளவில் இறக்குமதி செய்வதாக, இந்தியா உறுதி அளிக்கலாம். புல்லட் ரயில்கள், நவீன மின்னணு சாதனங்கள் போன்றவற்றின் தொழில்நுட்பத்தை, சீனாவிடம் இருந்து, இந்தியா பெறலாம். ஆனால், சீன பொருட்களை விற்கும் சூப்பர் மார்க்கெட் ஆக, இந்தியா இருக்கக் கூடாது.


தமிழகத்திற்கு உள்ள வாய்ப்புகள்கடந்த ஆண்டு, சீன அதிபர் ஸீ ஜின்பிங், மாமல்லபுரம் வந்தார்.அப்போது, பல நுாற்றாண்டுகளாக சீனாவுக்கும், சென்னைக்கும் உள்ள வர்த்தக உறவு குறித்து அவர் பேசினார். அந்த உறவு நீடிக்கும் வகையில், சீனா உடன் போட்டியிடும் அளவிற்கு, தமிழகம், தயாரிப்பு மையமாக உருவெடுக்க வேண்டும்.தமிழக அரசு, சீனா உடன் போட்டி யிடும் அளவிற்கு, தமிழகத்திற்கு உள்ள தனிச் சிறப்பு அம்சங்களை அடையாளம் காண்பது அவசியம். ஒரு மாநிலம் தொழில்மயமாவதற்கான முழு பொறுப்பும், அந்த மாநில அரசுக்கே உள்ளது. இதில், மத்திய அரசின் பங்கு மிகக் குறைவே. ரயில்வே, துறைமுகம், எரிசக்தி உள்ளிட்ட சில துறைகளில் மட்டும், மாநிலங்களுக்கு, மத்திய அரசு துணை நிற்கும். அதனால், எந்த வகையில், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, தயாரிப்பு நிறுவனங்களை ஈர்க்கலாம் என, தமிழக அரசு சிந்திக்க வேண்டும். ஜி.எஸ்.டி., அமலான பின், வரிச் சலுகை அளிப்பதில், மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரம் குறைந்து விட்டது.


latest tamil newsஇந்நிலையில், தமிழக அரசு, பன்னாட்டு நிறுவனங்களை, வெறும் வரிச் சலுகை காட்டி, ஈர்க்க முயற்சிக்க கூடாது. அது தவறான அறிகுறியாக கருதப்படும். பன்னாட்டு நிறுவனங்கள், பொருட்களின் சீரான, விரைவான சப்ளையைத் தான் எதிர்பார்க்கின்றன. அதற்காக, கூடுதல் செலவை ஏற்கவும் அவை தயாராக உள்ளன. அதனால், சென்னையைச் சுற்றி, 200 கி.மீ., சுற்றளவில், விரைவான சரக்கு போக்குவரத்துக்கு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். மேலும், அனைத்து தொழில்களுக்கும், சென்னை தான் வர்த்தக மையம் என்ற தோற்றத்தை மாற்றி, பிற மாவட்டங்களிலும், தொழில் துவங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். பிற மாவட்டங்களில் முதன் முறையாக தொழில் துவங்குவோருக்கு, பல சலுகைகள் வழங்கலாம். துாத்துக்குடி, கடலுார் துறைமுகங்களுக்கு இடையே இணைப்பு சாலைகள் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்தி, சரக்குகளை தடையின்றி விரைவாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கலாம்.

பன்னாட்டு நிறுவனங்கள், விரைவான சரக்கு போக்குவரத்து வசதிக்கு முன்னுரிமை அளிக்கின்றன.இதுவரை அன்னிய முதலீட்டாளர் , நிலம் கையகப்படுத்துவதில் தங்களுக்கு சாதகமாக, பல மாநில அரசுகளை பயன்படுத்திக் கொண்டனர். ஒரு மாநில அரசிடம் பேச்சு நடத்தி, வேறு மாநிலத்தில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கினர். அதனால், தமிழக அரசு, தொழில் துவங்க நிலம் ஒதுக்குவதற்கு முக்கியத்துவம் அளிப்பதை விட, நிறுவனங்கள் தேர்வு செய்யும் நிலத்திற்கான ஒதுக்கீடு, உரிமம் உள்ளிட்டவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கலாம். சென்னை, 'கேட்' எனப்படும் பொறியியல் சாதன வடிவமைப்பு பணிகளுக்கு, சர்வதேச மையமாக திகழ்கிறது. இங்குள்ள கிராபிக்ஸ் புரோகிராமர்கள், ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமின்றி, வாகனம் மற்றும் கனரக இயந்திரங்களையும் வடிவமைக்கின்றனர். தற்போது முப்பரிமாண தயாரிப்பு முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் தேவையான வல்லுனர்களின் வளமும், தமிழகத்தில் உள்ளது. இத்தகைய வல்லமை கொண்ட தமிழகம், சீரிய கொள்கை மற்றும் திறமையான நிர்வாகம் மூலம், பன்னாட்டு நிறுவனங்களை சுலபமாக இழுக்கலாம்.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா மட்டுமின்றி, வியட்நாம், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு செயலரை நியமிக்க வேண்டும். அவர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் பேசி, தமிழகத்தில் தொழில் துவங்க வைக்க வேண்டும். அத்துடன், நிலம் ஒதுக்கும் தாசில்தார் முதல், தொழிற்சாலைக்கு மின்சார இணைப்பு வழங்கும் லைன்மேன் வரை, அனைத்து மட்டத்திலும் பணிகள் விரைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், நிர்வாக நடைமுறை இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, கடினமான பணி ஒன்று உள்ளது. அது, நம் நலன் பாதிக்காதபடி, பன்னாட்டு நிறுவனங்களிடம் தொடர்ந்து பேசி, தொழில் துவங்க சம்மதிக்க வைப்பது தான்.

ஜி.ரமேஷ்,

பேராசிரியர்,

பொது கொள்கை மையம்

இந்திய தொழில்நுட்ப மையம், பெங்களூரு,

இமெயில்: rameshg@iimb.ac.in

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
10-மே-202013:37:37 IST Report Abuse
 Muruga Vel செங்குடு என்னும் சீன நகரிலேயே Fortune 500 கம்பெனிகள் எல்லாமே இயங்குகின்றன .. சீனர்களின் தொழில் திறமை சிறப்பானது .iPhone ஐ எடுத்துக்கொண்டாலே குறைந்த இடத்தை சிக்கனமாக உபயோகிக்க ஸ்க்ரூ உபயோகிக்காமல் ஒரு வித க்ளூவால் பாகங்களை ஒட்டியிருப்பார்கள் .. சீனா அளவுக்கு முன்னேற நமக்கு இன்னும் ஒரு தலைமுறை தேவைப்படலாம் ...
Rate this:
Cancel
VTR - Chennai,இந்தியா
09-மே-202010:06:14 IST Report Abuse
VTR Now, China is considered to have lost credibility among countries. India has a good relationship with America. America is offering an incentive to companies which decide to relocate from China Focus on American companies planning to move out of China, Hongkong, Taiwan More than tax holiday and other financial incentives, better infrastructure (particularly for material movement), easy approvals for various licenses subject to statutory compliance, support commitment from undue arm twisting by trade unions and various kinds of "rights" associations are a few necessities
Rate this:
Cancel
R.Kalyanaraman - Chennai,இந்தியா
09-மே-202009:56:33 IST Report Abuse
R.Kalyanaraman சீனா காரன் பொருள் எதுவும் இந்தியாவுக்கு வேண்டாம். சீனா காரன் பொருளை எதுவும் வாங்கவேண்டாம் என்று பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். சீனா கார XI ஜின்பங் ஒரு அயோக்கியன். உலக பொருளாதாரத்தையும் coronavirus உற்பத்தி செய்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது மட்டும் இல்லாமல் உலகத்தில் உலா மக்களை கொத்து கொத்தாக சகா அடித்து உள்ளான்.. உலகத்தில் உள்ள எல்லா தேசமும் ஒன்று சேர்ந்து சீனாவை boycott செய்து XI ஜிங்ப்பங்கை ஒழித்து கட்டணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X