இது நம்ம சென்னை பகுதி ஒன்று.

Updated : மே 08, 2020 | Added : மே 08, 2020
Share
Advertisement



latest tamil news


சென்னை இன்று எல்லோருடைய பார்வையிலும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.நல்லவேளை நான் இப்போது சென்னையில் இல்லை என்று வெளியூரில் இருப்பவர்களை பெருமூச்சு விடவைத்திருக்கிறது அந்த அளவிற்கு கொரோனா காரணமாக சென்னை பரிதாபமான தோற்றத்தில் இருந்தாலும் விரைவில் மீண்டு வரும் வரவேண்டும்.


latest tamil news


காரணம் இங்கே சாதி மத பேதம் கிடையாது ஆணவக்கொலைகள் அறவே கிடையாது. நீ யார்? உன் அப்பா யார்? தாத்தா என்ன செய்தார் எப்படி செத்தார் என்று பின்புலத்தை ஆராய்ச்சி செய்வோர் கிடையாது அவரவர் வேலையை அவரவர்கள் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டே இருப்பர்.


latest tamil news


இன்னும் சொல்லப்போனால் சொந்த ஊரில் வாழ வழியின்றி சென்னை வந்து வளமாகவும் நலமாகவும் வாழ்ந்து கொண்டிப்பர்கள் பலர்.ஏற்ற வேலை கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் இங்கே வேலையின்றி யாரும் இல்லை.பேசும் தமிழ் புரியாத மாதிரி இருக்கலாம் ஆனால் அதற்குள் ஒளிந்திருக்கும் அன்பு அலாதியானது சக மனிதன் பசித்திருக்க பார்த்திருக்காது.


latest tamil news


புயல் மழை வெள்ளம் என்று எது சென்னையை புரட்டிப் போட்டாலும் அதை நிமரச் செய்ய முதலில் கை கொடுப்பதும் சென்னைவாசிகளே.சென்னையை நாங்கள் விமர்சனம் செய்வோம் ஆனால் மற்றவர்கள் விமர்சனம் செய்வதை ஏற்கமாட்டோம்.எவ்வளவு சோதனை வந்தாலும் ன்னையை விட்டு வெளியே வரவும் மாட்டோம், விட்டுக்கொடுக்கவும் மாட்டோம்.


latest tamil news


இந்த சென்னையில் பல இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகவே ‛டிரோன்' எனப்படும் பறக்கும் கேமிரா மூலமாக படமெடுப்பது என்பது சிரமமான விஷயமாக இருந்தது. ஆனால் இந்த கொரோனா சமயத்தில் போலீசாருக்கே டிரோன் கேமிராவின் தேவை அதிகமாக இருந்ததும் மேலும் அதன் முக்கியத்துவமும் புரிந்தது என்பதாலும் தடையின்றி பல இடங்களை பறக்கும் கேமிராவில் படம் எடுத்தோம் அதன் முதல் பகுதி இது.
முதல் பகுதியில் சென்னை அண்ணாசாலையும்,சென்ட்ரல் ரயில் நிலையமும்,கூவம் ஆறும்,மெட்ரோ ரயில் தடமும்,கோயம்பேடு பஸ் நிலையமும் காட்டப்பட்டு உள்ளது.-எல்.முருகராஜ்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X