நியூயார்க்கில் கொல்லப்படும் கொரோனா நோயாளிகள்' : நர்ஸ் அதிர்ச்சி வாக்குமூலம்

Updated : மே 08, 2020 | Added : மே 08, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement

நியூயார்க்: 'நியூயார்க்கில் நோயாளிகள் கொரோனா தொற்றால் இறக்கவில்லை. முழு அலட்சியம் மற்றும் மருத்துவமனையின் தவறான நிர்வாகத்தால் கொலை செய்யப்படுகின்றனர்' என கொரோனா நோயாளிகள் வார்டில் பணிபுரியும் நெவாடாவை சேர்ந்த நர்ஸ் கண்ணீர் மல்க கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.latest tamil newsஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரண்டு வெவ்வேறு மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் நிக்கோல் சிரோடேக் பேஸ்புக் நேரலை வீடியோவில் கூறியதாவது,ஒவ்வொரு முறையும் நோயாளியின் சார்பாக நான் வாதிட முயற்சிக்கும்போது, மருத்துவமனை நிர்வாகம் வேறு ஒரு பிரிவுக்கு மாற்றி விடுகின்றனர். நான் பணியாற்றிய இரண்டு மருத்துவமனைகளிலும் இதே போன்று நிகழ்ந்தது.

இனி என்ன செய்வது என்று கூட எனக்கு தெரியாது. வக்கீல் குழுக்கள் கூட இவர்களை பற்றி ஒரு தகவலையும் கொடுக்கவில்லை. கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை இங்கே ஒரு பொருட்டாகவே இல்லை. எல்லோரும் வாழப் போவதில்லை என்பது எனக்கு தெரியும். நான் ஒன்றும் அறிவில்லாத பெண் இல்லை, டன் கணக்கில் மக்கள் இறக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் இவர்கள் எல்லாம் கொரோனா தொற்றால் இறக்கவில்லை.

மருத்துவ அலட்சியத்தால் நோயாளிகள் இறந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளது. நர்ஸ் ஒருவர் ஒரு நோயாளிக்கு இதயத்துடிப்பு இருந்தபோதே , அவருக்கு தேவையே இல்லாத போதும் அவரிடம் ஒரு டிஃபிபிரிலேட்டரைப் பயன்படுத்தி கொலை செய்தார். அதை தடுக்க அறையை விட்டு நான் வெளியே ஓடியபோது, நர்சிங் இயக்குனர் நர்ஸை நோக்கி தலையை ஆட்டுகிறார். இறுதியில் நோயாளி இறந்துவிட்டார். ஆனால் கொரோனா தொற்றால் அல்ல.

இதே போன்று, ஒரு நோயாளிக்கு தவறான வகை இன்சுலின் வழங்கப்பட்டது. இன்னும் ஆபத்தான வகையில், உடலில் ரத்தப்போக்கு இல்லாத, ரத்தம் குறைவான நோயாளிகளுக்கு இரத்த மாற்றம் செய்யவும் மருத்துவமனை மறுத்து வருகிறது. சரியான ரத்த ஓட்டம் இல்லாமல், வென்டிலேட்டர்கள் நோயாளிகளுக்கு எந்த வகையிலும் உதவாது.


latest tamil newsஇது கொரோனா நோயாளிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சினை. யாரும் இதை கேட்பதில்லை. இந்த மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் கவனிப்பதில்லை. நான் உண்மையில் ஒவ்வொரு நாளும் இங்கு வந்து அவர்களை கொலை செய்யப்படுவதை பார்க்கிறேன்'இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-202016:13:00 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) சொர்க்கமே என்றாலும் அது நம் நாடு போல் வருமா ???
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
14-மே-202004:43:20 IST Report Abuse
B.s. Pillai It may be the bad work of a few health workers who take the opportunity to revenge their racist feelings. US has not come out of racist problem totally. I saw one movie " Hidden figures " where black women could not use the toilets and had to go some few blocks away to reach the toilet meant for coloured women.Russia was successful in sending Yuri gogrin first in the space. So there was a lot of pressure on US NASA Team to send some one to the space live. It was this black lady ( I forgot the name ) who made the NASA dream of sending a man in space ultimately. When the team leader found out her absence from her duty for 40 minutes that she had to run 10 blocks away in drenching rains for relieving herself, that he breaks the toilet board of coloured women and s from now on, there is no seperate toilet for coloured women every women, white or coloured, can use the same toilet. Promotions were not given worhty and educated black women. They were not permitted to continue hteir education in college or universities where white students only were admitted. One black girl had to approach the court to get her admission in this white college for Eng. Degree.They can not use the same coffee making machine. So cruelly treated, But she made the calculations in Mathematics for the correct trajectory of entry and re entry of rockets for NASA.In NASA there is one building now named after this black woman. In spite of all, there is still the racism alive in some of the remote districts in USA. A very good movie to see based on true story.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
12-மே-202019:17:27 IST Report Abuse
S.Ganesan இந்த அமெரிக்காவில் வாழ வேண்டும் என்றுதானே பல இந்தியர்கள் ஓடினார்கள் ?. இதை படித்தாவது அவர்கள் மனம் திருந்துவார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X