அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்துமாறு பிரதமருக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம்

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
Electricity Amendment Bill, Tamilnadu, Tamil Nadu CM, EPS, PM modi, Modi, தமிழகம், முதல்வர், இபிஎஸ், பிரதமர், கடிதம், மின்சார சட்டத்திருத்தம்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநிலங்கள் கவனம் செலுத்துவதால் புதிய மின்சார சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என முதல்வர் இபிஎஸ், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் இபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவில் இருக்கும் புதிய திருத்தங்கள் மாநில கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடுவதாகவும் உள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளில் நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்துவதால், மத்திய அரசு அனுப்பியிருக்கும் சட்டத்திருத்த மசோதா மீது அலோசிக்க அவகாசம் தேவை. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவது என்பது மாநில அரசின் உரிமை சார்ந்தது. அதை மாநில அரசிடமே விட்டுவிட வேண்டும்.


latest tamil news


அது மட்டுமல்லாமல் மின்சார சட்டத்திருத்த மசோதாவில் கூறப்பட்டிருக்கும் சில ஷரத்துகள், மாநில அரசுகளின் மின்சாரத் துறைக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்பதாலும், சில அம்சங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது, குறிப்பாக இதுபோன்ற பேரிடர் காலத்தில் இது மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வர இது சரியான காலமாக இருக்காது எனத் தெரிகிறது. எனவே, புதிய சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், பேரிடர் காலம் முடிந்த பிறகு, இது பற்றி தமிழக அரசு ஆலோசித்து பரிந்துரைகளை அனுப்பும். இவ்வாறு கடிதத்தில் கோரியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
09-மே-202020:38:20 IST Report Abuse
R chandar This is a high time government should all freebies instead they can give cash compensatory support by stopping all freebies and subsidies , by giving freebies , it is giving room for doing malpractice in procuring and distribution. Government of India should give cash support per ration card for all category and stop all subsidies,freebies, those who likes to have subsidies been exempted from being given cash support and can be given subsidies, rest of the people can be compensated with cash support instead of freebies and subsidies. People should also have an option to switch over to private distributor of electricity as like getting communication connection from private providers.
Rate this:
Cancel
Covim-20 - Soriyaar land,இந்தியா
09-மே-202020:02:55 IST Report Abuse
Covim-20 சுடலை வலியுறுத்தினானாம்... இவங்களும் லெட்டர் போட்டாங்களாம்... எது மாநில உரிமை?? முறைகேடுகள் செய்வதா?? மின்வாரியத்தை மத்திய அரசிடமே ஒப்படைத்துவிட்டால் இவர்கள் முறைகேடு செய்வதெப்படி... சமையல் எரிவாயு சிலிண்டர் போல மின்சார விநியோகமும் ஒழுங்குபடுத்தப்பட்டு விடுமே... மக்களுக்கு தீமை செய்யும் டாஸ்மாக்கை திறப்பதற்கு தயக்கமே இல்லாமல் மேல்முறையீடு... மக்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களுக்கு தடை கோருதல்... விளங்கிடும்...
Rate this:
Cancel
sriram - Chennai,இந்தியா
09-மே-202019:52:31 IST Report Abuse
sriram இங்கு கருத்து சொல்பவர்கள் வரைவு சட்ட திருத்தத்தை படிக்க வில்லை என்று தெரிகிறது. திருத்தம் இலவச மின்சாரம் கொடுப்பதை தடுக்கவில்லை. காஸ் மானியம் போல பணத்தை வாங்கி கணக்கில் போட்டு விட்டு மீட்டர் படி நுகர்வோர் பில் கட்ட வேண்டும். மானியம் எவ்வளவு எத்தனை பேர் மானியம் பெறுகிறார்கள், எவ்வளவு யூனிட் என்பதெல்லாம் தெளிவாக தெரியும். இதோடு திருட்டு எவ்வளவு என்றும் சரியாக தெரியும். அதனால் தான் இங்கே கோடி பிடிக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X