ராசிபுரம்: ராசிபுரத்தில், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய கடைகளான மளிகை, மருந்து, பால் கடைகள் உள்பட கட்டுமானம் மற்றும் மின்மோட்டார் சம்பந்தப்பட்ட கடைகள், ஓட்டல்களை குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. ஆனால், பள்ளிகள் உள்ளிட்ட பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு தளர்வு அளிக்கப்படவில்லை. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள், 'வாட்ஸ் ஆப்' மூலம், பாடங்களை அனுப்பி படிக்க வைக்க ஏற்பாடு செய்தனர். ஒன்பதாம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு செல்லும் மாணவர்கள், 11ம் வகுப்பிலிருந்து, 12ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே ஜூம், கூகுள் மீட்டிங் ஆகிய செயலிகள் மூலம், மாணவர்களுக்கு நேரடியாக பாடங்களை எடுக்க தொடங்கியுள்ளனர். தினமும், இரண்டு மணி நேர வகுப்பு என்ற கட்டுப்பாடுடன், மாணவர்கள் ஆன்லைனில் படிக்கத் தொடங்கியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE