பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைக்கு எதிர்ப்பு: பெண்கள் போராட்டம்

Added : மே 09, 2020
Share
Advertisement

திருச்செங்கோடு: மோடமங்கலத்தில் மதுக்கடையை மூட வலியுறுத்தி, பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டனர். திருச்செங்கோடு அடுத்த, மோடமங்கலத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு, நேற்று, ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால், மோடமங்கலம் கிராமத்திலும் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என, அச்சப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள், 'மதுக்கடையை மூடவேண்டும்' என, வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருச்செங்கோடு புறநகர் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார், பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X