பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதி அட்டையின்றி உலா வரும் பொதுமக்கள்

Added : மே 09, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் நகரில் மக்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சகஜ நிலையில் உலாவுகின்றனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், வரும், 17 வரை ஊரடங்கை அறிவித்துள்ளன. வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டபோதும் ஒரே இடத்தில், ஐந்து பேர் கும்பலாக நிற்பதை தவிர்க்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாகங்கள், குளிர்சாதன வசதியுடைய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், தனியார் அலுவலகங்கள், டீக்கடை, அழகு நிலையம் உள்ளிட்டவை, மறு உத்தரவு வரும் வரையில் திறக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாமக்கல்லில் விதிகளை மீறி பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் உரிய அனுமதி அட்டையின்றி, மக்கள் உலா வருகின்றனர். நாமக்கல்லில், ஊரடங்கு முழுமையாக தளர்த்திக்கொண்டது போல், மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். விதிமுறைகளை மீறி பலர் தடையின்றி வெளியே உலா வருவதால், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்குமோ என்று அஞ்சப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X