பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறனாளிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவி

Added : மே 09, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, நிவாரண பொருள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஊரடங்கில் தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை, எம்.ஜி.ஆர்., நகர், தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய பகுதியில் நடந்தது. நீதிபதிகள் விஜய்அழகிரி, ஜெயந்தி, கனலீஸ்வரன், விஜயன், சுஜாதா மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, ஒருங்கிணைப்பாளர் சேகர் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முகக் கவசம், கைகழுவும் திரவம், அரிசி உள்ளிட்ட உணவு பொருள்கள், காய்கறி தொகுப்பு உள்ளிட்டவற்றை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X