பொது செய்தி

தமிழ்நாடு

பலத்த காற்று வீசியதில் 2,000 வாழை மரங்கள் நாசம்

Added : மே 09, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பலத்த காற்று வீசியதில், 2,000 வாழை மரங்கள் சாய்ந்தன. குமாரபாளையம், தட்டான்குட்டை பஞ்., பெத்தாம்பாளையத்தில் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் பலத்த காற்று வீசியது. இதில், முனியம்மாள் என்பவருக்கு சொந்தமான, 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட கோழிக்கொண்டை பூச்செடிகள் சேதமாகின. வி.ஏ.ஓ., செந்தில்குமார் ஆய்வு செய்து, கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து, முனியம்மாள் கூறுகையில், ''அதிக தொகை முதலீடு செய்து வாழை மற்றும் பூச்செடிகள் வைத்திருந்தேன். பலத்த காற்றினால் அனைத்தும் சேதமானதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X