பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பொருட்களை விற்றால் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

Added : மே 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாமக்கல்: தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுப்பதற்காக, தமிழக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தமிழக அரசு, ரேஷன் கடைகள் மூலம், விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், பொது வினியோகத் திட்டத்தின் மூலம், ஏற்கனவே வழங்கப்படும் அரிசியுடன் கூடுதலாக, அரிசி குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும், தலா, ஐந்து கிலோ அரிசி, ஏப்., மே, ஜூன் மாதங்களுக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில், அரிசி பெறும், 4,82,850 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, நடப்பு மாதத்துக்கான ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வெளிச்சந்தையில் அல்லது இடைத்தரகள் மூலம் விற்பனை செய்தால், நடவடிக்கை எடுப்பதுடன், ரேஷன் கார்டுகள், 'பண்டகமில்லா குடும்ப அட்டைகளாக' மாற்றம் செய்யப்படும். மேலும், அத்தியாவசிய பொருட்களை, கள்ளத்தனமாக பெற்றுக் கொள்வதற்கு, கடத்தல்காரர்களுக்கு துணை புரியும் பொதுமக்கள், அரசுப் பணியாளர்களாக இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆல்வின், பெங்களூர் எல்லா ரேஷன் கடைகளிலும் பொருட்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு கூட்டு வியாபாரம். திமுக, கம்யூனிஸ்ட், அதிமுக, பாமக, விசி உட்பட அனைவரும் இணைந்து செய்யும் வியாபாரம். கலெக்டர் இது தெரியாமல் இருக்கின்றார். பாவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X