மதுக்கடையை இடமாற்றக்கோரி காவல்காரன்பட்டி மக்கள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கடையை இடமாற்றக்கோரி காவல்காரன்பட்டி மக்கள் போராட்டம்

Added : மே 09, 2020
Share

குளித்தலை: காவல்காரன்பட்டி, அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
குளித்தலை அடுத்த, காவல்காரன்பட்டி குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த குடிமகன்கள் இங்கு வந்து மது வாங்கி செல்கின்றனர். மேலும், அருகில் உள்ள ஆர்.டி.மலையில், கொரோனா தொற்று ஏற்பட்ட நபர், திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், ஆர்.டி.மலை கிராமத்திலிருந்தும், மது பாட்டில் வாங்க வருகின்றனர். இதனால், காவல்காரன்பட்டி கிராம மக்கள் அச்சப்பட்டனர். நேற்று காலை, நெடுஞ்சாலையில் இருந்து வரும் சாலையில், முற்செடிகள், மரக்கட்டைகளை போட்டு வழி மறித்தனர். தொடர்ந்து, கடையை இடமாற்றக்கோரி, மதுக்கடை முன் போராட்டம் நடத்தினர். தோகைமலை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X