ஆராய்ச்சி மையத்தை மாற்ற வேண்டும்: வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆராய்ச்சி மையத்தை மாற்ற வேண்டும்: வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை

Added : மே 09, 2020
Share

கரூர்: 'வெற்றிலை விவசாயத்தை பாதுகாக்க, வேலாயுதம்பாளையத்துக்கு ஆராய்ச்சி மையத்தை மாற்ற வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம், புகளூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. கற்பூர ரகம், வெள்ளை பச்சைக்கொடி ரகம், கரூர் மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. காவிரியாற்று படுகையில், சாகுபடி செய்யப் படும் வெற்றிலை, 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். வெற்றிலையை பாதுகாக்கவும், விவசாய பரப்பை அதிகரிக்கவும், ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம், ப.வேலூரில் இருந்த வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை பல ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாவட்டம், சிறுகமணிக்கு மாற்றி விட்டனர். இதை, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்துக்கு மாற்ற வேண்டும். தற்போது, வெற்றிலையை நேரிடையாக மக்கள் பயன்படுத்துவது இல்லை. இதனால், விற்பனை குறைந்து வருகிறது. மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலையை, பயன்படுத்தும் வகையில் மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெற்றிலையில் ஏற்படும், வாடல் நோயை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை தேவை. ஓராண்டில், 65 நாள்கள் மட்டும் வெற்றிலை விவசாயிகளுக்கு வேலை உள்ளது. ஆண்டு முழுவதும் வேலை இருக்கும்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X