பொது செய்தி

இந்தியா

ரூ.411 கோடி கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பின் புகாரளித்த எஸ்.பி.ஐ

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
SBI, state bank of india, CBI, Loan Defaulter, எஸ்பிஐ, சிபிஐ, புகார், கடன்

புதுடில்லி: வங்கிகளில் ரூ.411 கோடி கடன் பெற்ற 3 தொழிலதிபர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற பின் எஸ்.பி.ஐ வங்கி புகார் தெரிவித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராம்தேவ் இன்டர்நேஷனல் நிறுவனம், பாஸ்மதி அரிசியை மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. அந்நிறுவனத்தின் 3 இயக்குனர்களான நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா ஆகியோர் எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.173 கோடி கடன் பெற்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல், கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கிகள் என மொத்தம் ரூ.411 கோடி கடன் பெற்றிருந்தார்கள். மேலும், சவுதி அரேபியா, துபாய் நாடுகளிலும் தங்கள் அலுவலகத்தை செயல்படுத்தி வந்துள்ளனர்.


latest tamil news


வாங்கிய கடனை ராம் தேவ் நிறுவனம் செலுத்தாததையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி அந்தக் கடனை செயல்படாத சொத்தாக (என்.பி.ஏ) எஸ்பிஐ அறிவித்தது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் கடன் கொடுத்த வங்கிகள் அனைத்தும் கூட்டாகச் சேர்ந்து ஹரியானாவில் உள்ள அந்நிறுவனத்தை ஆய்வு செய்துள்ளன. ஆனால் அதற்கு முன்னதாக தொழிலதிபர்கள் மூவரும் தங்கள் தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள் அனைத்தையும் பலருக்கும் விற்பனை செய்து தங்களின் வரவு செலவுக்கணக்கில் சரி செய்து போலியான கணக்குகளை வங்கியில் தாக்கல் செய்துள்ளனர்.


latest tamil news


அதன்பின் அந்த நிறுவனம் தொடர்பாக வங்கிகள் விசாரணையை முழுமையாக நடத்தியப்பின் கடந்த பிப்ரவரி 25ல் எஸ்பிஐ வங்கி சார்பில் சிபிஐ அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛கடந்த பிப்ரவரி 25ம் தேதி எஸ்பிஐ வங்கி சார்பில் சிபிஐ அமைப்பிடம் ராம் தேவ் நிறுவன இயக்குநர்கள் 3 பேர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ அமைப்பின் முதல் கட்ட விசாரணையில் கடன் பெற்றவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுவிட்டனர். நாட்டை விட்டு தப்பிச் சென்ற பின் புகார் கொடுத்தால் எவ்வாறு விசாரிக்க முடியும்.

ஏறக்குறைய ஓராண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவரும் பெற்ற கடன் என்பிஏ.,வாக இருக்கும்போது வங்கிகள் புகார் கொடுக்கவில்லை. கொரோனா வைரஸ் ஊரடங்கால் எந்தவிதமான சோதனையும் இதுவரை சிபிஐ அந்த நிறுவனங்களில் நடத்தவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வாருங்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் விசாரணைக்கு வராதபட்சத்தில் அடுத்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,' எனத் தெரித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
10-மே-202008:42:08 IST Report Abuse
Darmavan எல்லாமே நாடகமாக தெரிகிறது,ஏன் அளவுக்கு மீறி கடன் கொடுக்கிறார்கள்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
09-மே-202020:05:46 IST Report Abuse
தமிழ் மைந்தன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து குற்றவாளிகளை வெளியே கொண்டுவரவும் அவர்களுக்கு கடன் கொடுக்க பரிந்துரை செய்த தங்களது பெயர் வெளியே தெரியாமல் இருக்கவும் காங்கிரஸ் கம்பெனி வக்கீல்கள் தயார்........அபிஷேக் சிங்வி, கபில்சிபல், சிதம்பரம், சல்மான் குர்ஷித், போன்றவர்கள் தயார்..........
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
09-மே-202019:41:08 IST Report Abuse
babu நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ பயந்த மாதிரி நடி. 70:30 டீல் ஓ.கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X