பொது செய்தி

தமிழ்நாடு

குறுவை சாகுபடிக்கு அட்டவணை: விவசாய சங்கம் வலியுறுத்தல்

Added : மே 09, 2020
Share
Advertisement

கரூர்: 'குறுவை சாகுபடியின் போது, எந்தெந்த பகுதிகளில் என்னவகை, நெல் நாற்று விடலாம் என்பது குறித்த, அட்டவணையை விவசாய துறை வெளியிட வேண்டும்' என, காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் வெளியிட்ட அறிக்கை: குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையை, ஜூன், 12ல் திறப்பது குறித்தும், அப்போது எந்தெந்த பகுதியில், என்ன வகை நெல் நாற்று விடலாம் என்பது குறித்த, ஒரு அட்டவணையை விவசாய துறை வெளியிட வேண்டும். அதில், விதை முதல் உரம், பணம் மானியம், பண்ணை இயந்திரம் போன்றவை குறித்த காலத்தில் கிடைப்பது குறித்த தகவல்கள் இடம் பெற வேண்டும். மேலும், டெல்டா சாகுபடிக்கு மட்டும்தான், விவசாய துறை என்றில்லாமல், தோட்டக்கலை துறைக்கும், பிற சாகுபடி திட்டங்களுக்கும் அட்டவணை தயாரிக்க வேண்டும். அதன் செயல்பாட்டை கண்காணிக்க, மாவட்ட உற்பத்தி குழு, 15 நாட்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் கூட வேண்டும். நடப்பாண்டு, தமிழகத்தில் நெல் மட்டுமன்றி, அனைத்து பயிர்களுக்கும், அரசின் ஆதரவு இருந்தால் கொரோனாவால் அழிந்த பொருளாதாரத்தை, ஒரே ஆண்டில் சீர்த்திருத்த முடியும். அரசின் இந்த முயற்சிக்கு விவசாயிகள் சங்கம், எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். அரசும் அடிக்கடி விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினருடன் கலந்து பேசி, பேரிடர் நிவாரண திட்டங்கள், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X