சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளித்தலை அருகே லேப்-டெக்னீஷியன் வெட்டி கொலை: 2 வாலிபர்கள் கைது

Added : மே 09, 2020
Share
Advertisement

குளித்தலை: நச்சலூரில், லேப்-டெக்னீஷியன் கொலை செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே, நங்கவரம் டவுன் பஞ்., தெற்கு மாடு விழுந்தான்பாறையை சேர்ந்தவர் சரவணன், 48; லேப்-டெக்னீஷியன். நேற்று முன்தினம் இரவு, 12:00 மணியளவில் நச்சலுரில் இருந்து, பைக்கில் வீட்டுக்கு செல்லும் போது, சொட்டல் நெடுஞ்சாலையில், கரும்பு தோட்டம் அருகே, அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இரவு, ரோந்து சென்ற போலீசார், உடலையும், இரண்டு அரிவாள்களையும் கைப்பற்றினர். எஸ்.பி., பாண்டியராஜன், ஏ.டிஎஸ்.பி., தம்பிதுரை, டி.எஸ்.பி., கும்மராஜா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதே ஊரைச்சேர்ந்த முருகானந்தம், 29, செல்லமுத்து, 29, ஆகியோரை, குளித்தலை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, டி.எஸ்.பி., கும்மராஜா கூறியதாவது: கடந்த மாதம், 21ல் அதே ஊரைச்சேர்ந்த பால் வியாபாரி அன்பழகன் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில், சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக கருதிய, அன்பழகனின் உறவினர்கள், முருகானந்தம், செல்லமுத்து ஆகியோர், சரவணனை கொலை செய்ய திட்டமிட்டனர். நேற்று முன்தினம், பொது இடத்தில், மூன்று பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். சந்தேகத்தின் பேரில், இருவரையும் விசாரித்ததில், கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இவ்வாறு, அவர் கூறினார். சரவணனுக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன், இரண்டாம் ஆண்டு மருத்துவமும், இளைய மகன், ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். கடந்த, இரு மாதங்களுக்கு முன், போலி மருத்துவம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சரவணன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X