சீரமைக்காத சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Added : மே 09, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில், குடிநீர் குழாய் பராமரிப்பு நடந்த இடங்களில், சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர், நகராட்சி பகுதிகளில், அடிக்கடி குழாய்கள் உடைந்து, சாலைகளில் குடிநீர் செல்வது தொடர்கதையாக உள்ளது. மக்கள் அளிக்கும் புகாரின் பேரில், உடைந்த குழாய்கள் பள்ளம் தோண்டப்பட்டு சீரமைக்கப்படுகிறது. ஆனால், அப்பகுதிகளில் உடனடியாக சாலையை சீரமைக்காமல், நகராட்சி ஊழியர்கள் தடுப்புகளை வைத்து விடுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, கரூர் ஆர்.எம்.எஸ்., அலுவலகம், உழவர் சந்தை பகுதிகளில், பள்ளம் தோண்டப்பட்டு, உடைந்த குழாய்கள் சமீபத்தில் சீரமைக்கப்பட்டன. ஆனால், அப்பகுதியில் தார்ச்சாலைகள் அமைக்கப்படவில்லை. தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு கரூர் மாவட்டத்தில் சற்று தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், நகரப்பகுதிகளில், வாகனங்கள் வழக்கம் போல் செல்கின்றன. விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, குழாய்கள் பராமரிப்பு நடந்த இடங்களில், புதிதாக தார்ச்சாலையை சீரமைக்கவோ, புதிதாக அமைக்க வேண்டியதோ அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X