கொரோனா பரவ வூஹான் சந்தையும் ஒரு காரணம்: உலக சுகாதார அமைப்பு

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஜெனீவா: கொரோனா வைரஸ் பரவ வூஹான் சந்தையும் ஒரு காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று, உலகையே அச்சுறுத்தி வருகிறது. முதன்முதலில் எங்கிருந்து பரவியது என்பதில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. வூஹான் நகர கடல்வாழ் உயிரின சந்தையில் இருந்த வெளவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக முதல்கட்ட தகவல்கள்
WHO, Wuhan Market, Corona Outbreak, Peter Ben Embarek, China, Wuhan, World health organisation, meat market, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, india, world fights corona, health, உலகசுகாதாரஅமைப்பு, வூஹான், சந்தை, கொரோனா, வைரஸ், பரவல்

ஜெனீவா: கொரோனா வைரஸ் பரவ வூஹான் சந்தையும் ஒரு காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று, உலகையே அச்சுறுத்தி வருகிறது. முதன்முதலில் எங்கிருந்து பரவியது என்பதில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. வூஹான் நகர கடல்வாழ் உயிரின சந்தையில் இருந்த வெளவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், வூஹானில் உள்ள ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டு, கசிந்து பரவியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை சீனா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை எனவும், உலக சுகாதார அமைப்பு, சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.


latest tamil news


அதற்கு ஏற்றார்போல், உலக சுகாதார அமைப்பும் கொரோனா விவகாரத்தில் சீனா சிறப்பாக செயல்பட்டதாக கூறியது. இதனால் டிரம்பின் கூற்று உண்மை என்ற கருத்து நிலவியது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவ, சீனாவின் வூஹான் சந்தையின் பங்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் உணவு பாதுகாப்பு வைரஸ் நிபுணர் டாக்டர் பீட்டர் பென் எம்பரெக் கூறியதாவது:
உலக நாடுகளின் இந்த நிலைமைக்கு வூஹான் சந்தையும் ஒருகாரணம் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் எந்தளவுக்கு காரணம் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த வைரஸ், சந்தையில் இருந்து வந்ததா அல்லது தற்செயலாக வைரஸ் உருவானதா எனக் கூறமுடியவில்லை. ஆனால் இந்த வைரஸ் சந்தையிலும் அதைச் சுற்றியும் காணப்பட்டன. வைரஸ் பரவாமல் தடுக்க ஜனவரி மாதம் தான் சந்தையை சீனா மூடியது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-மே-202022:02:44 IST Report Abuse
madhavan rajan சூப்பர் செய்தி. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க காந்தியும் ஒரு காரணம் என்று கூறுகிறமாதிரி இருக்கு.
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
09-மே-202020:37:00 IST Report Abuse
vasan அப்படியே சீனாக்காரன் எழுதி கொடுத்ததை பாடிவிட்டார்கள்
Rate this:
Cancel
அருண் பிரகாஷ் சென்னை உலக நாடுகள் அனைத்தும் சீனாவிற்கு எதிராக திரும்பியதும் இப்போது உலக சுகாதார அமைப்பு நல்லவர் போல நடக்க ஆரம்பித்து உள்ளது.டிசம்பர் மாதம் தொடங்கிய வைரஸ் பாதிப்பு ஆனால் சந்தை மூடப்பட்டது ஜனவரி மாதத்தில், சீனாவும் ஊஹானும் தனிமைப்படுத்தப்பட்டு உலக நாடுகளும் ஊஹாணும் ஒன்றிணைக்கப்பட்டு வைரஸ் பரப்பப்பட்டது.ஏன் பெய்ஜிங் பாதிக்கப்படவில்லை. சீனாவின் மற்ற முக்கிய நகரங்கள் பாதிக்கவில்லை.இதற்கு என்ன விளக்கம் கொடுக்கும் உலக சுகாதார அமைப்பு.சீனா இனி பொருளாதார ரீதியில் வட கொரியாவை போல தனிமை படுத்தப்பட வேண்டும்.
Rate this:
JSS - Nassau,பெர்முடா
09-மே-202021:28:24 IST Report Abuse
JSSஉண்மை கருது நண்பரே. இது ஹிட்லரின் genocide க்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X