டிரம்ப் மகளின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Ivanka Trump, Personal Assistant, Corona Positive, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, positive cases, new corona cases, corona death, corona in US, America, Washington, white house, world fights corona, இவாங்கா, டிரம்ப், உதவியாளர், கொரோனா, வைரஸ்

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் பணியாற்றி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 13 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களில் மூன்றாவது நபராக இவருக்கு கொரோனா தொற்று உள்ளது.


latest tamil news


2017-ம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகராக அவரது மகள் இவாங்கா உள்ளார். கொரோனா ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து கடந்த 2 மாதமாக இவாங்கா வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். அதனால் அவரது நேர்முக உதவியாளர் பல வாரங்களாக இவாங்காவை சந்திக்கவில்லை. இவாங்காவிற்கு அறிகுறி ஏதுமில்லை. இருப்பினும் இவாங்காவிற்கும் அவரது கணவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான அம்முடிவுகளில் நெகடிவ் என்றே வந்துள்ளது.


latest tamil news


அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸின் ஊடக செயலாளர் கேட்டி மில்லருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா உள்ளது தெரியவந்துள்ளது. மில்லருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தொடர்புகொண்டு நபர்களை கண்டறியும் நடவடிக்கை வெள்ளை மாளிகையில் நடந்துள்ளது. மேலும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா, யாருக்கேனும் வெப்பநிலை அதிகம் உள்ளதா என உறுதி செய்யவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வார தொடக்கத்தில் அரிசோனா பகுதியில் முகக்கவச தொழிற்சாலையை பார்வையிட்ட போது டிரம்ப் முகக்கவசம் அணிய மறுத்துவிட்டார். தற்போது வெள்ளை மாளிகையிலேயே கொரோனா பரவி, அனைவருக்கும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியிருப்பதால் டிரம்பை சமூக ஊடகங்களில் கிண்டலடிக்க தொடங்கிவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-மே-202018:06:37 IST Report Abuse
Janarthanan வாங்கடா இத்தாலிய அடிமைகளே இதனால் தான் இந்தியாவில் கொரோனா வந்தது உங்க உதவாக்கரை லாஜிக் கூறுங்க ?? அது ஒரு தனிப்பட்ட சந்திப்பு மக்களிடம் interaction கிடையாது ?? மக்களிடம் பரவியதற்கு யாரு கூடி குலாவியது யாரு என்று தெரியும்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
09-மே-202017:44:55 IST Report Abuse
Tamilan ஜனவரியிலிருந்து இங்கிருந்து வந்திருக்கலாம், அதிலிருந்து, இதிலிருந்து ஏதிலிருந்தாவது வந்திருக்கலாம், இப்படி பரவியிருக்கலாம் அல்லது அப்படி பரவியிருக்கலாம் அல்லது எப்படியாவது பரவியிருக்கலாம் என்று மட்டுமே இவர்களால் கூற முடிகிறது. இதுவரை, இங்கிருந்துதான் வந்தது, இப்படித்தான் பரவியது என்று யாராலும் கூறமுடியவில்லை . கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் இன்றைய வளர்ந்துவிட்ட விஞ்சானத்தின் நிலை. தெரிந்தாலும், கண்டுபிடித்தாலும் வெளியில் உண்மையை கூற மாட்டார்கள் என்பதுதான் இன்றைய 21 ஆம் நூற்றாண்டின் ஜனநாயகத்தின் நிலை.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
09-மே-202017:38:58 IST Report Abuse
Tamilan இதைத்தான் இவர்கள் ஜனவரியிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் . இனியும் எங்கிருந்து வந்தது, எப்படி பரவியது, எப்படி எப்படி உலகமெல்லாம் கட்டுக்கடங்காமல் பரவியது என்று யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை . அல்லது வெளியில் சொல்லமுடியவில்லை இவர்களால் . இவ்வளவுதான் ஜனநாயகம் , வளர்ந்துவிட்ட விஞ்சானத்தின் நிலை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X