பொது செய்தி

இந்தியா

துபாய், அபுதாபியிலிருந்து கேரளா திரும்பிய இருவருக்கு கொரோனா

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020
Share
Advertisement
கேரளா, கொரோனா, கொரோனாவைரஸ்,  அபுதாபி, துபாய், Kerala, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona in kerala, Dubai, Abu dhabi, new corona cases, positive cases, india, india fights corona, corona patients, corona test

திருவனந்தபுரம்: அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கிய 1.7 லட்சம் இந்தியர்களை பத்திரமாக தாய்நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், நேற்று முன்தினம்( மே 7) அன்று, ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அபுதாபி மற்றும் துபாயில் இருந்து 363 பேர், கேரள தலைநகர் திருவனந்தபுரம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் கோழிக்கோட்டிலும், மற்றொருவர் கொச்சியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், கேரளாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது. 484 பேர் குணமடைந்தனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 17 பேர் மட்டும் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X