பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு மாத தவிப்புக்கு பின் இறந்த கணவர் உடலுடன் சென்னை திரும்பிய பெண்

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மாரடைப்பால் குமார் (35) என்பவர் உயிரிழந்து விட, மிகுந்த வேதனையுடன் தவித்து வந்த அவரது மனைவி, அரசு ஏற்பாடு செய்த விமானம் மூலம் கணவர் உடலுடன் சென்னை வந்தடைந்தார்.கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்திய தொழிலாளர்களை மீட்க 'வந்தே பாரத்' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளான 7-ம் தேதி யுஏஇ.,யிலிருந்து
UAE, Chennai, Husband, dead Body, Tamil Nadu, Vande Bharat mission, Dubai, Madurai woman, United Arab Emirates,  இறந்த கணவர், உடல், சென்னை,

சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மாரடைப்பால் குமார் (35) என்பவர் உயிரிழந்து விட, மிகுந்த வேதனையுடன் தவித்து வந்த அவரது மனைவி, அரசு ஏற்பாடு செய்த விமானம் மூலம் கணவர் உடலுடன் சென்னை வந்தடைந்தார்.

கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்திய தொழிலாளர்களை மீட்க 'வந்தே பாரத்' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளான 7-ம் தேதி யுஏஇ.,யிலிருந்து கேரளாவிற்கு 2 விமானங்கள் இயக்கப்பட்டது. நேற்று (மே 8) துபாயிலிருந்து 360 பயணிகளுடன் இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் சென்னை வந்தன. பயணிகள் அனைவரும் ஆன்டிபாடி பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் அனுமதிக்கப்பட்டனர். சென்னை வந்த இரண்டு விமானங்களில் 200 தொழிலாளர்கள், 37 கர்ப்பிணிகள், மருத்துவ பிரச்னை உடைய 42 பேர் பயணித்தனர். அவர்களுடன் முதியவர்கள், சுற்றுலா வந்தவர்கள், குடும்பத்தினரை சந்திக்க வந்தவர்களும் திரும்பியுள்ளனர்.


latest tamil news


அனைவரும் மகிழ்ச்சியாக சொந்த ஊர் திரும்பிய நிலையில், கோலம்மாள் என்பவர் மட்டும் வேதனையுடன் வீடு திரும்பியுள்ளார். யுஏஇ.,யில் ஏப்ரல் 13-ம் தேதி மாரடைப்பால் இறந்த தனது கணவரின் உடலுடன் பயணித்து அவர் தமிழகம் திரும்பியுள்ளார். 35 வயதான குமார் அங்குள்ள செராமிக் தொழிற்சாலை ஒன்றில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கும் கோலம்மாளுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக தம்பதியினர் யுஏஇ.,யில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஏப்., 13-ம் தேதி காலை பணிக்குச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

“எனக்கு எல்லாமே அவர் தான். நான் இதுவரை எங்கும் தனியாக சென்றதில்லை. இந்த முறை அவர் என்னை தனியாக விட்டுவிட்டார். இது தான் நான் தனியாக செல்லும் முதல் பயணமும் கூட. அவரை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான் உயிருடனே உள்ளேன். எந்த பெண்ணுக்கும் இது போன்ற விதி அமைய கூடாது.” என கதறி அழுதுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரஞ்சித் - madurai,இந்தியா
15-மே-202020:30:59 IST Report Abuse
ரஞ்சித் 35 வயசுல மாரடைப்பு. அவரோட உணவுப்பழக்கம் மாறிடுச்சா? வேலைப்பளு அதிகமா?
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
15-மே-202005:27:21 IST Report Abuse
NicoleThomson வேதனையான நிகழ்வுகள்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-மே-202007:49:19 IST Report Abuse
skv srinivasankrishnaveni vvvvvvvvsad mrs kolamma RIP
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X