காங்., நிறுவனத்தின் ரூ.16 கோடி சொத்து முடக்கம்

Updated : மே 10, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
National Herald case, ED, PMLA, Bandra, Delhi,  Enforcement Directorate, Associated Journals Limited, AJL, Prevention of Money Laundering Act, National Herald newspaper, Moti Lal Vora, நேஷனல் ஹெரால்டு வழக்கு, பாந்த்ரா, கட்டடம், இணைப்பு

புதுடில்லி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் காங்கிரசின் 'அசோசியேட்டட் ஜர்னல்' நிறுவனத்திற்குச் சொந்தமான மும்பை கட்டடத்தில் 16.38 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பகுதியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

காங். தலைவர் சோனியாவின் குடும்பம் மற்றும் காங். மூத்த தலைவர்கள் சிலருக்குச் சொந்தமான அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனம் 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஒன்பது மாடி கட்டடம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 120 கோடி ரூபாய்.


latest tamil newsஹரியானாவில் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கி அதை வங்கியில் அடமானம் வைத்து பெற்ற தொகையில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. 'இந்த வழக்கு தொடர்பாக பாந்த்ராவில் உள்ள ஒன்பது மாடி கட்டடத்தில் 16.38 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது; தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' என அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covim-20 - Soriyaar land,இந்தியா
12-மே-202010:55:36 IST Report Abuse
Covim-20 சூனியா அம்மாவும் பப்புக்குட்டியும் திஹார் ஜெயில் கிளம்புறதுக்கு ரெடியாகுங்க...
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
09-மே-202022:23:55 IST Report Abuse
adalarasan அடேங்கப்பா… பயங்கர மோசடி கும்பலா இருக்கும் போல இருக்கே.. விசாரணை துரிதப்படுத்துங்க…?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
09-மே-202021:19:52 IST Report Abuse
அசோக்ராஜ் சுப்ரமணிய சுவாமியின் ஆள் யாரோ அமலாக்கத்துறையில் இருக்கிறார் போல இருக்கு. விஷயம் கேள்விப்பட்டால் மோடிக்கு கோபம் தாங்காது. அதிகாரி அநேகமாக மாற்றம் செய்யப்படுவார். கலைஞரும் எம்ஜியாரும் போல, எடப்பாடியும் ஸ்டாலினும் போல, மோடியும் மைனோவும் perfect understanding கில் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X