ஆந்திர விஷவாயு சம்பவம்: நிறுவனம் முன்பு கிராம மக்கள் போராட்டம்

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

விசாகபட்டிணம்: 11 பேர் பலியாவதற்கு காரணமான எல்.ஜி., பாலிமர்ஸ் கம்பெனி முன் இன்று 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்



latest tamil news



ஆந்திரமாநிலம் விசாகப்பட்டிணம் அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தென்கொரிய நிறுவனம் எல்.ஜி. பாலிமர்ஸ் ல் மே. 7 ம் தேதி அதிகாலை ஏற்பட்ட விஷவாயு காரணமாக கிராமமக்கள் 11 பேர் உயிரிழந்தனர். இதில் நூற்றுக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த எல்.ஜி., பாலிமர்ஸ் நிறுவனத்தை ஆய்வு செய்வதற்காக டி.ஜி.பி., டிஜி சவாங் வந்திருந்த போது ஆர்ஆர் வெங்கடபுரம் கிராம மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தில் பலியான இருவரது உடல்களை, அருகில் உள்ள மருத்துவமனையில் நடந்த போஸ்ட்மார்டத்திற்கு பிறகு, தொழிற்சாலை வாயில் முன்பு வைத்து நீதி கேட்டு போராடினர். விரைவில் பிறந்த நாள் கொண்டாட இருந்த தன் 9 வயது குழந்தையை இழந்த தாய் ஒருவர் டிஜிபி., காலில் விழுந்து கெஞ்சி உள்ளார்.


latest tamil news



இந்நிலையில், இச்சம்பவத்திற்காக எல்.ஜி., பாலிமர்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. 'சம்பவத்திற்கான காரணத்தை ஆராய முயற்சி மேற்கொள்ளப்படும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது' இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
10-மே-202004:01:41 IST Report Abuse
babu இன்னும் கொஞ்சநாளில் இதே மக்களுக்கு தேசத்துரோகிகள், சமூகவிரோதிகள் என பட்டம் சுமத்தும் இந்த அரசு.
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
10-மே-202004:02:02 IST Report Abuse
babu இன்னும் கொஞ்சநாளில் இதே மக்களுக்கு தேசத்துரோகிகள், சமூகவிரோதிகள் என பட்டம் சுமத்தும் இந்த கார்பொரேட் பக்த அரசு.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
09-மே-202021:13:42 IST Report Abuse
அசோக்ராஜ் மாமூல் பிச்சை வாங்கித்தின்பவனுக்கு எவ்வளவு கோபம் வருகிறது பாருங்கள். படத்தில் லத்தியை தூக்கிக்கொண்டு கிளம்பிட்டான். நல்ல போலீசாக இருந்தால், கம்பெனி முதலாளியை சிறையில் வைத்திருப்பான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X