டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கைது| AAP MLA arrested in Delhi doctor suicide case | Dinamalar

டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கைது

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (2)
Share
 AAP, MLA, AAP MLA, Doctor, Suicide, Arrested, Delhi, Delhi Police, Prakash Jarwal, Aam Aadmi Party, abetment charges, Dr Rajinder, ஆம் ஆத்மி, எம்.எல்.ஏ., கைது

புதுடில்லி: டில்லி துர்காவிஹார் நகரில்நாப் சாராய் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ராஜேந்திர சிங்,, 53, கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இரு பக்க கடிதம் சிக்கியது. அதில் தனது தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால் என்பவர் கடந்த சில மாதங்களாக தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். சில சமயங்களில் கொலை மிரட்டலும் விடுத்தார்.


latest tamil newsஇதனால் மனவேதனை அடைந்து தற்கொலை முடிவு எடுத்ததாகவும் தான் தற்கொலைக்கு எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால் தான் காரணம் என அந்த கடித்தில் எழுதியுள்ளார்.
கடிதத்தை கைப்பற்றிய போலீசார் எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால் மீது கொலை மிரட்டல் விடுத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் டில்லி போலீசார் பிரகாஷ் ஜர்வாலுக்கு பல முறை சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் ஆஜராகாததால், நேற்று அவரிடம் விசாரணை நடத்தி இன்று பிரகாஷ் ஜர்வாலை கைது செய்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X