வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்-1பி மற்றும் ஜே2 விசாவில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு வழங்க அந்நாட்டு பார்லியில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் அமெரிக்கா தினந்தோறும் அதிக அளவு பாதிப்பினை சந்தித்து வருகிறது. இதுவரை அங்கு 13 லட்சத்திற்கும் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 78,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தினமும் 25,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதி்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டு மருத்துவ பணியாளர்கள் இடைவிடாமல் பணியாற்றும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே பார்லியில் அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கிரீன் கார்டு வெளிநாட்டு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் வழங்குவதற்கு அந்நாட்டு பார்லியில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 25,000 வெளிநாட்டு செவிலியர்களுக்கும் 15,000 மருத்துவர்களுக்கும் நிரந்தர குடியுரிமை கிடைக்கும். கொரோனாவுடன் நீண்ட காலம் போராட வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அமெரிக்காவின் மருத்துவ தேவைகளுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும் என்று அந்நாட்டு எம்.பி., க்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE