சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாமனார்,மருமகன் வெட்டிக்கொலை பதட்டம் போலீஸ் குவுிப்பு: 3 பேர் கைது

Added : மே 09, 2020
Share
Advertisement

துாத்துக்குடி:இருவரை வெட்டிக்கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உடையாளர்குளம், காந்திநகரை சேர்ந்தவர் பலவேசம் 60. கூலித்தொழிலாளி. வீட்டுபத்திரத்தை அடமானம் வைத்து வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த சண்முகசுந்தரத்திடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கடனை திரும்ப செலுத்தி விட்டு வீட்டுபத்திரத்தை கேட்டார். சண்முகசுந்தரம் தரமறுத்தார். பலவேசம், நாசரேத் போலீசில் புகார் செய்தார்.சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

ஆத்திரமுற்ற சண்முகசுந்தரத்தின் உறவினர்கள் 6 பேர், நேற்று முன்தினம் இரவில் பலவேசத்தின் வீட்டில் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டினர். அதனை தடுத்த அவரது மருமகன் தங்கராஜ் 27, என்பவரையும் வெட்டினர். இதில் இருவரும் இறந்தனர். சண்முகசுந்தரத்தின் உறவினர்கள் முத்துராஜ், செல்லத்துரை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X