பொது செய்தி

இந்தியா

'சி.பி.எஸ்.இ., விடைத்தாள் திருத்தும் பணி 50 நாளில் முடிவடையும்'

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020
Share
Advertisement
cbse, exam, paper correction, Union Ministry of Human Resource and Development, HRD minister, Ramesh Pokriyal, Class 10, Class 12, board exams, paper evaluation, சிபிஎஸ்இ,தேர்வு

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 50 நாளில் முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் பணி குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணியை மேற்கொள்ள, நாடு முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



சுமார் 1.50 கோடி விடைத்தாள்கள், இந்த மையங்கள் மூலமாக, ஆசிரியர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 50 நாட்களில் விடைத்தாள் திருத்தும் பணி முடிவடையும். 10 மற்றும் 12ம் வகுப்புக்கு ஜூலை 1 முதல் 15ம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வுகள் முடிந்த பின் தேர்வு முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X