தாயகம் திரும்பும் இந்தியர்களை தனிமைப்படுத்த கேரள அரசு நடவடிக்கை| Kerala govt sets up isolation centres for expatriates | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தாயகம் திரும்பும் இந்தியர்களை தனிமைப்படுத்த கேரள அரசு நடவடிக்கை

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (1)
Share

திருவனந்தபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் இந்தியர்களை மீட்டு தனிமைப்படுத்த கேரள அரசு தயாராகி வருகிறது.



latest tamil news



கொரோனா வைரசின் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினர். ஊரடங்கு உத்தரவு காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துமுடங்கியுள்ளது. இதனால், வேலை மற்றும் கல்வி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று மத்திய அரசும், ஏர் இந்திய விமானங்கள் மூலமாகவும் கப்பல் மூலமாகவும் பல நாடுகளிலும் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.


latest tamil news


கேரளாவில் 4 விமானங்கள் மூலமாக பல இந்தியர்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு நாடு திரும்புபவர்கள் மூலமாக கேரளாவின் மற்ற இடங்களில் நோய் பரவாமல் இருக்க அவர்களை தனிமைப்படுத்தும் திட்டத்தை கேரள அரசு துவங்கியது. அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதற்காக கேரளாவின் சில கல்லூரிகள் மற்றும் விடுதிகள் போன்றவை தனிமைப்படுத்தும் மையங்களாக மாறி வருகின்றன. வெளிநாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவிற்குள் வரும் அனைவரும் பாதுகாப்புக்காக 14 நாட்கள் வரை தன்மைப்படுத்தப்படுவர். இவ்வாறு கேரள அரசு தெரிவித்துள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X