இஞ்சி இடுப்பழகி...: வார்னர் மீண்டும் ஆட்டம்

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020
Share
Advertisement

சிட்னி: இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார் வார்னர்.



latest tamil news



கொரோனா வைரஸ் அச்சுறுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கால் முடங்கி போய் உள்ளது. உலகம்முழுவதிலும் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த ஊரடங்கு காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் பேசி வருகின்றனர்.

இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் வார்னர். 'கொரோனா' பிரச்னை காரணமாக வீட்டில் இருக்கும் இவர், 'டிக்டாக்' மூலம் 'வீடியோ'க்கள் வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே 'புட்ட பொம்மா' என்ற தெலுங்கு 'ஹிட்' பாடலுக்கு ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.



latest tamil news



தற்போது தேவர்மகன் படத்தில் இடம் பெற்ற 'இஞ்சி இடுப்பழகி' பாடலின் இசைக்கு ஏற்ப மனைவி கேண்டிஸ், மகளுடன் நடனமாடிய புதிய 'வீடியோ'வை வெளியிட்டார். அதில் 'நாங்கள் மீண்டும் வந்துட்டோம்' என குறிப்பிட்டுள்ளார். இதனை தமிழக ரசிகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X