பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பு: 10 மாநிலங்களில் ஆய்வு செய்கிறது மத்திய குழு

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020
Share
Advertisement

Central Teams, To Visit, 10 States, With High Coronavirus Cases,மத்திய குழு,10 மாநிலங்கள், ஆய்வு

புதுடில்லி; கொரேனாவால் பெருமளவு பாதித்த 10 மாநிலங்களில் மத்திய குழுவினர் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசிற்கு இதுவரை 1900-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா' வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் தலைமையிலான குழுவினர் மாநிலம் தோறும் சிறப்பு குழுவை அனுப்பி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்துவருகிறது.


latest tamil news




இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் அளவிலான சிறப்பு அதிகாரி, சுகாதாரத்துறை வல்லுனர்கள் அடங்கிய குழுவினர் இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத், உத்திரபிரதேசம், டில்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், பஞ்சாப், மேற்குவங்கம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களுக்கு சென்று கொரோனாவால் அதிகம் பாதித்த சிவப்பு மண்டல பகுதிகளில் ஆய்வு செய்து கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்; எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X