சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

காலியாகும் கூடாரம்!

Updated : மே 10, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 காலியாகும் கூடாரம்!

'கொரோனா வைரஸ் பிரச்னை கோர தாண்டவமாடும் நிலையில் கூட, எங்கள் மீதான கொலை வெறி, இவர்களுக்கு குறையாது போலிருக்கிறதே...' என, பா.ஜ., வினரின் நடவடிக்கைகளைப் பார்த்து, கண்களை கசக்குகிறார், காங்கிரஸ் தலைவர் சோனியா. 'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எங்கள் முதல் வேலை' என, பா.ஜ., தலைவர்கள் சமீப காலமாகவே கூறி வருகின்றனர். அதற்கு ஏற்ப, சட்டசபை தேர்தல்களில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரசை தோற்கடித்தனர்.காங்., கட்சியின் முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். இதனால், காங்கிரஸ் கூடாரம், கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வருகிறது. கொரோனா பிரச்னை துவங்கிய நிலையில் கூட, காங்கிரசில், ராகுலுக்கு வலதுகரமாக திகழ்ந்த ஜோதிராதித்யா, சிந்தியாவை தங்கள் பக்கம் இழுத்தனர். அவர் வாயிலாக, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்த்ததுடன், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசையும் அமைத்தனர். அடுத்தபடியாக, காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்களுக்கு வலை வீசி வருகின்றனர். அபிஷேக் சிங்வி, சசி தரூர், ஆனந்த் சர்மா என, முக்கிய தலைகளுக்கு, 'ஸ்கெட்ச்' போடும் வேலையில், பா.ஜ.,வினர், 'பிசி'யாக உள்ளதாக, காங்கிரஸ் வட்டாரத்துக்குள் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதைக் கேள்விப்பட்ட சோனியா, 'கொரோனா பிரச்னை முடிவதற்குள், காங்கிரசில் உள்ள பலர், பா.ஜ., பக்கம் சாய்ந்து விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கூடாரத்தை காலி செய்து விடுவரோ...' என, புலம்புகிறார்.


ஜெகன்மோகனின் தவிப்பு

'யார் கண் பட்டதோ தெரியவில்லை; பட்ட காலில் படும் என்பது உண்மை தான் போலிருக்கிறது' என, புலம்புகிறார், ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., - காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.

இவர், ஆந்திர மாநில முதல்வர் பதவியில் அமர்ந்ததும், ஏதோ ஓரளவுக்கு திட்டங்களை செயல்படுத்தினார். மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம், ஜெகனுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. ஆனால், 'பில்டப்' அதிகம். ஜெகனைச் சுற்றி, நிறைய ஜால்ரா கோஷ்டிகள் உள்ளன. இவர், ஏதாவது ஒரு திட்டத்தை துவக்கி வைத்தால், நுாறு திட்டங்களை செயல்படுத்தியது போல், சமூக வலைதளங்களில், 'பில்டப்' கொடுப்பது தான், இந்த கும்பலுக்கு வேலை.

இந்த கும்பலின் அளவுக்கு அதிகமான ஜால்ராக்கள் பொதுமக்களுக்கு தெரியத் துவங்கியதும், ஜெகனின் இயலாமைகள் ஒவ்வொன்றாக, வெளிச்சத்துக்கு வரத் துவங்கின. கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக, எதிர்க்கட்சிகள் சமீபத்தில் குற்றம் சாட்டின. இதை சமாளிப்பதற்குள், ஜெகனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது.

இப்போது, அடுத்த பிரச்னை துவங்கி விட்டது. விசாகப்பட்டினத்தில், தொழிற்சாலையில் வாயு கசிந்ததில், 10க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். இந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர், 'உங்களுக்கு எதற்கு முதல்வர் பதவி, ராஜினாமா செய்யுங்கள்' என, போராட்டங்களை துவக்கியுள்ளன. இதனால், என்ன செய்வது எனத் தெரியாமல், தவியாய் தவிக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TJ Pillai - Chennai,இந்தியா
16-மே-202007:40:01 IST Report Abuse
TJ Pillai திரு ராஜீவ் கொல்லப் பட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, அவரின் மடமையால் பல நூறு பெண்கள் அவர்கள் குடும்பத்தினர் கண் முன்னே கற்பழிக்கப் பட்டது நிகழ்ந்த பின்பும், பொறுமை காத்து, இந்தியா தன்னை காக்கும் என்று நம்பி இருந்த அப்பாவித் தமிழினத்தை, நமது வரிப் பணத்தில் ஸீனாவிடமிருந்து வாங்கிய, உலகால் தடை செய்யப் பட்ட கிளஸ்டர் பாம்களைக் கொண்டு, கொத்து கொத்தாக கொன்று குவித்த மாபாவிக் கடசி இந்த சூனியாவின் காங்கிரஸ் தானே??? அதன் மாபாவம் இவர்களை எப்படி வாழ வைக்கும்? உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சே தான் ஆகணும். இன்னும் பெரும் அழிவு இந்த கடசிக்கும் இந்த சூனியா நாட்டைவிட்டே அவரின் தாயகம் குடும்பத்தோட ஓடும் நாளும் வரலாம். வரும், வரவேண்டும் என்றே இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
15-மே-202020:54:22 IST Report Abuse
Somiah M விதைத்ததை ........................அறுவடை செய்துதானே தீரவேண்டும் .
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
15-மே-202018:42:53 IST Report Abuse
Tamilnesan காங்கிரஸ் கட்சியை ஆங்கிலத்தில் AICC (ஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டி) என்று சொல்வார்கள். AICC யின் தற்போதய விரிவாக்கம் ஆல் இந்தியா கரப்ஷன் கார்பொரேஷன் (All India Corruption Corporation ).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X