அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து ஜனநாயகத்திற்கு எதிரானது'

Updated : மே 11, 2020 | Added : மே 10, 2020 | கருத்துகள் (71)
Share
Advertisement
MKStalin, Stalin, dmk, திமுக, ஸ்டாலின்

சென்னை: 'கடந்த, 2019 - 20ம் ஆண்டுக்கான, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியை, ரத்து செய்யும் சுற்றறிக்கை, பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு எதிரானது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 2020 - 21; 2021 - 22 என, இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும், நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 2019- - 20ம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கி விட்டன.

இந்நிலையில், அந்த நிதியையும் ரத்து செய்ய, மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது, கடும் கண்டனத்திற்குரியது. உரிமையின் அடிப்படையில், கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் நிறுத்தி வைப்பதும், கொடுத்ததை பாதியில் பறிப்பதும் பண்பாடாகாது.

எனவே, தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திய சுற்றறிக்கை; ஏற்கனவே, இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தரவையும், திரும்ப பெற வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
11-மே-202023:30:01 IST Report Abuse
sankar கண்டிப்பாக இந்த நிதி வழங்குவது நிரந்தரமாக நிறுத்தப்படவேண்டும் - முழுமையான 'லபக்' தொடரக்கூடாது - மூலபத்திரம் இல்லாமலேயே இன்னும் பல ஆலயங்கள் உருவாகும்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-மே-202008:07:33 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தொகுதி நிதியில் கொள்ளையடிக்க தடை போட்ட வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
10-மே-202020:30:40 IST Report Abuse
krishna Sudalai khan sollvadhu miga sari.Ivar dictionaryil jananayagam enbadhu aataya poduvadhu ena artham.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X