தி.மு.க.வுக்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன யோசனை

Updated : மே 10, 2020 | Added : மே 10, 2020 | கருத்துகள் (114)
Share
Advertisement
Prashant Kishor, Centre, Tamil Nadu, State govt, election, Chennai, Political parties, dmk, aiadmk

சென்னை: தமிழகத்தில், ஒரு பக்கம் கொரோனா வாட்டி வதைத்தாலும், இன்னொரு பக்கம், அடுத்த வருட துவக்கத்தில் வரும், சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை, அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. எதிர்கட்சியான தி.மு.க.,வின் தேர்தல் வியூகத்தை வகுக்க, தேர்தல் வல்லுனர், பிரசாந்த் கிஷோர் பாண்டே, 300 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படும் நிலையில், அவரும் வேலைகளைத் துவங்கி விட்டார்.


latest tamil newsகடந்த, 2014ல் மோடிக்கு, லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் உதவிய இவரை, பா.ஜ., 'கழற்றி' விட்டது. பின் பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் சென்றார். அவரும் பிரசாந்தை ஓரங்கட்டிய பின், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜிக்கு ஆலோசகராக முயற்சித்தார். ஆனால், மம்தா மறுத்து விட்டார். இதையடுத்து, காங்கிரசிற்கு வியூகம் வகுக்க, அக்கட்சி தலைவர்களை நெருங்கினார். ஆனால் அங்கும் தோல்வி தான் மிச்சம். கடைசியாக, தி.மு.க.,தான் இவருக்கு அடைக்கலம் கொடுத்ததோடு, பணத்தையும் கொட்டிக் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் நிலவும், பிரதமர் மோடி எதிர்ப்பு அலை தான், தி.மு.க.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என்பது பிரசாந்தின் வியூகம். இதற்காக, சில நிமிடங்கள் ஓடக் கூடிய, 'வீடியோ க்ளிப்' களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். மக்களிடம் கருத்து கேட்கும் இந்த வீடியோக்களில், அவர்கள் அனைவரும், 'தி.மு.க.,தான் ஆட்சிக்கு வர வேண்டும்; அ.தி.மு.க., ஆட்சி சரியில்லை' என, கூறுவது போல் இருக்குமாம்.

தமிழக, 'டிவி' சேனல்களில், மோடிக்கு எதிராக பேசக் கூடியவர்களை எல்லாம் அழைத்து, பிரசாந்த் பேசியுள்ளார். 'காங்கிரசை, 'கழற்றி' விடுங்கள்; உங்களை, 150 தொகுதிகளில் வெற்றி பெற வைக்கிறேன்; யாருடைய தயவும் இல்லாமல் நீங்கள் ஆட்சி அமைக்கலாம்' எனவும், தி.மு.க., தலைமையிடம் சொல்லியிருக்கிறார். இது, டில்லி காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.இதற்கிடையே, தி.மு.க.,விற்குள்ளேயே, பிரசாந்த் கிஷோருக்கு எதிர்ப்பு உள்ளது. 'நம்முடைய சொந்த முயற்சியிலேயே வெற்றி பெறலாம்; எதற்கு இவ்வளவு பணத்தை செலவழிக்க வேண்டும்' என, ஒரு முன்னாள் தி.மு.க., அமைச்சர் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்படுகிறாராம்.

Advertisement
வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VTR - Chennai,இந்தியா
16-மே-202012:16:59 IST Report Abuse
VTR I was flabbergasted with the kind of prominence given to Mr. Kishore, earlier, for that matter till recently. Had big doubts about his capability to project Mr. Stalin as an accep leader in the context of next year's election. Now, I am convinced he would achieve his goal by hook or crook (not necessarily in ethical ways). Consider the following: As detailed above, big thurst being shown to project Mr. Stalin and hence DMK as the savior of Tamilnadu. AIADMK (no individual) is projected as despicable. Noted prominent people with anti-BJP sentiments are brought together and put into the spotlight. Media, Visual in particular, effectively used for this purpose. Mr. Hari, Ms. Ashoka (both of Tanthi TV "Ayudha ezhuthu"), Mr. Karthigai Selvan (of Pudiya Thalaimurai "Nerpada pesu"), Mr. Vijayan (of News 7 "Kelvi Neram") are perceived to be neutral moderators. But, now even these people have joined the bandwagon of Mr. Nelsan of News 7, Mr. Thambi of Pudiya Thalaimurai. Now everybody is bent on demeaning both the Central and State Governments. Look how Mr. Jeyaranjan, Dr. Shanthi, and so on (regular participants in these programs) they comment, the kind of un parliamentarian words that they use. These are only a very few samples. In essence, "IS PROJECTING Mr. STALIN & HENCE 'DMK', ADMK & BJP" as he intends. THE BEST MANIPULATOR, Mr. KISHORE
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
16-மே-202000:52:03 IST Report Abuse
Rajesh அழகிரி, கனிமொழி, விஜயகாந்த், சீமான், கமல், ராமதாஸ் கம்யூனிஸ்ட் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டி இட்டால், திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் அல்லாதவர்கள் இவர்களை தேர்ந்தெடுப்பார்கள். கொள்கை கத்திரிக்காய் எல்லாம் இப்போது வேகாது.....
Rate this:
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
15-மே-202018:51:11 IST Report Abuse
Tamilselvan மூன்றாவது இடத்திற்கு முன்னூறு கோடி செலவிடுகிறார்கள். பீகே முன்னூறு கோடி ஆட்டை போட்டு விட்டு ஓட போகிறார். பிரசாந்தின் உத்தி இந்த முறை மண்ணை கவ்வ இருக்கிறது தமிழ்நாட்டில் இவரது பருப்பு வேகாது விரைவில் கட்சி மஞ்சள் துண்டு குடும்ப பிடியில் இருந்து விடுபடும். தொண்டர் கையில் கட்சி வரும்.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
15-மே-202021:10:26 IST Report Abuse
s.rajagopalanதமிழ் நாட்டில் பி ஜெ பி க்கு சொல்லும்படியான ஆதரவே கிடையாது...இதில் மோடிக்கு எதிரான அலை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? இஸ்லாமியர் , கிறிஸ்துவர்கள் வாக்கு இவர்களுக்கு கிடையாது. மீதம் இருக்கும் வாக்கு தி மு க . அ தி முக பிரித்துக்கொள்ளும் ..இதுதான் நிலவரம். எல்லோருக்கும் தெரிந்த இதை கிஷோர் சொல்கிறாராம்..அதற்கு 350 கோடி ...கொடுக்கட்டும் ...எப்படியோ சம்பாதித்த பணம் இப்படித்தானே போகணும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X