1,000 கி.மீ சைக்கிள் பயணத்தில் கார் மோதி பலியான தொழிலாளி

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (22)
Advertisement
லக்னோ: வெளி மாநிலத்தில் சிக்கிய தொழிலாளி, தனது நண்பர்களுடன் 1000 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு சைக்கிளில் புறப்பட்டார். பாதி தூரத்தை கடந்து லக்னோவை அடைந்த நிலையில் கார் மோதி பலியான சம்பவம் நடந்தேறியுள்ளது.நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சில தொழிலாளர்கள் சைக்கிள்
Migrant, Cycling, migrant worker Accident, தொழிலாளி, சைக்கிள், பயணம், 1000கிமீ, விபத்து, பலி

லக்னோ: வெளி மாநிலத்தில் சிக்கிய தொழிலாளி, தனது நண்பர்களுடன் 1000 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு சைக்கிளில் புறப்பட்டார். பாதி தூரத்தை கடந்து லக்னோவை அடைந்த நிலையில் கார் மோதி பலியான சம்பவம் நடந்தேறியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சில தொழிலாளர்கள் சைக்கிள் அல்லது நடைப்பயணமாக சொந்த ஊர் திரும்புகின்றனர். பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் பகுதியை சேர்ந்த 26 வயதான சாகீர் அன்சார் என்பவர், தங்கள் மாவட்டத்தை சேர்ந்த ஏழு நண்பர்களுடன் டில்லியில் பணியாற்றி வந்துள்ளனர். ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடிவெடுத்த இவர்கள், சைக்கிளில் மே 5ம் தேதி பயணத்தை தொடங்கியுள்ளனர்.


latest tamil news


சுமார் 1000 கி.மீ தூரத்தை சைக்கிள் மூலமாகவே அனைவரும் கடக்க முடிவெடுத்தனர். லக்னோ வரை பாதி தூரத்தை கடக்கவே அவர்களுக்கு 5 நாட்கள் ஆகியுள்ளன. நேற்று (மே 10) காலை 10 மணியளவில் உணவு உண்பதற்காக சாலையின் தடுப்பில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் அன்சாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது, மற்றவர்கள் அருகில் இருந்த மரத்தில் தூக்கி எறியப்பட்டதால் ஓரளவு காயத்துடன் தப்பினர். காரில் இருந்து இறங்கிய டிரைவர், இழப்பீடு பணம் கொடுப்பதாக கூறி பின்னர் மறுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அன்சாரியை, நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.


latest tamil news


மோதிய கார் லக்னோவை சேர்ந்த பதிவு எண்ணை கொண்டதாகவும், அடையாளம் தெரியாத டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த அன்சாரிக்கு, மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இதேபோல், கடந்த மே 7ம் தேதி, சத்தீஸ்கரை சேர்ந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் உ.பி., மாநிலம் லக்னோவில் இருந்து சொந்த ஊர் செல்லும்போது, இதே சாலையில் விபத்தில் சிக்கி கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் 5 வயதுக்கும் குறைவான இரு குழந்தைகள் தப்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-மே-202016:54:54 IST Report Abuse
Bhaskaran ஆயிரக்கணக்காணக்கான தொழிலாளிகளின் வயிற்றெரிச்சல் சும்மா விடாது
Rate this:
Cancel
சீனு கூடுவாஞ்சேரி உண்மைதான். சாலையில் கூட்டம் இல்லை. கார் ஓட்டும் போது எந்த வித தடங்கல் இல்லாததால் நமக்கு தெரியாமலேயே நூறு கி.மி.வேகத்தை தொட்டுவிட முடிகிறது. அப்போது திடீரென யாராவது கவனமின்மையாக குறுக்கே வந்தால் விபத்து கட்டாயம் ஏற்படும். நேரம் நன்றாக இருந்தால் தப்பிக்க முடியும். யாரையும் தவறு சொல்ல முடியாது.
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
11-மே-202013:42:54 IST Report Abuse
Ashanmugam இந்த பாவங்கள்( இதுவரைக்கும் ஊரடங்கில் இறந்த அப்பாவி ஏழை எளிய அடிதளத்து மக்கள்) எல்லாம் மூட்டை கட்டி இறுதியில் நரகத்தில் தள்ளிவிடும். இது உலக நியதி. செய்த தான தர்மம் என்றும் தக்க சமயத்தில் உயிர்காக்கும். செய்த பாவங்கள் கருமங்கள் தக்க சமயத்தில் உயிரை மாய்த்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X