பொது செய்தி

இந்தியா

பாக்.,கில் தாவூத் இப்ராஹிம் நடமாட்டம்: இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டம்?

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
india, pakistan, dawood ibrahim, dawood, pak, Terroist attack, isi, terrorist, cities, Lashkar-e-Taiba, LeT, Jammu and Kashmir, J&K, Islamabad, Intelligence sources, இந்தியா, பாகிஸ்தான், பாக், பயங்கரவாதிகள், தாவூத்இப்ராஹிம், தாவூத், இந்தியநகரங்கள், தாக்குதல்,ஐஎஸ்ஐ, லஷ்கர்இதொய்பா,

புதுடில்லி: பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து எல்லையில், பாதுகாப்பை இந்தியா பலப்படுத்தியுள்ளது.

மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக பதுங்கியுள்ளார். அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல முறை இந்தியா கோரியும் பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை. எங்கள் நாட்டில் தாவூத் இல்லை எனக்கூறி வருகிறது. ஆனால், கராச்சியில் தாவூத் இப்ராஹிம் தங்கியுள்ள வீடு என்ற புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளியானது. இதற்கிடையில், இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களுக்கு தாவூத் இப்ராஹிமை பயன்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


latest tamil news


பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில், தாவூத் இப்ராஹிம் வெளிப்படையாக நடமாடுவதை பலர் பார்த்துள்ளனர். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களும் சிலர் தாவூத்தை சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆயுதங்களை கொடுத்து இந்திய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தும் பணியை ஒப்படைத்துள்ளதாக சில தகவல்கள் வருகின்றன. இதையடுத்து, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை இந்தியா பலப்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
11-மே-202019:19:16 IST Report Abuse
konanki கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய ஆட்களின் நடமாட்டம் அதுவும் வழிப்பாட்டு தலங்களில் அதன் அருகாமையில் உஷாராக இருக்கணும். டிரோன் மூலம் CC TV மூலம் அதிக கண்காணிப்பு. மாவட்ட நிர்வாகம் சந்தேக வளையத்தில் உள்ள இடங்கள் நபர்கள் அமைப்புக்கள் கண்காணிப்பு உயர்த்த வேண்டும்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
11-மே-202019:14:19 IST Report Abuse
konanki திருப்பூர் கோயம்புத்தூர் மாவட்ட மக்கள் ஆட்சியர் போலிஸ் உளவு துறை வருவாய் துறை முழு கவனத்துடன் கோரானாவை சமாளித்து வரும் நிலையில் இப்போது மற்றுமொரு நோய் தாக்குதலுக்கும் தயாராக வேண்டும்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
11-மே-202019:10:13 IST Report Abuse
konanki தெற்கு காஷ்மீரில் ஹிஜபுல் மமொஜிகதீன் தலைவர் 4 நாட்களுக்கு முன் அவர் இறைவனடி சேர்ந்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X