பொது செய்தி

இந்தியா

மின்துறை அமைச்சகத்திற்கு சீல்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Delhi, Shram Shakti Bhavan, Sealed, Employee, corona Positive, COVID-19, corona, coronavirus, corona outbreak, corona updates, corona news, corona cases, new corona cases,  Ministry of Power, corona in delhi, india fights corona, டில்லி, மின்துறை, அமைச்சகம், கொரோனா, வைரஸ், சீல்

புதுடில்லி: டில்லியில் உள்ள மத்திய மின்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு, கொரோனா உறுதியானதை அடுத்து ஷ்ரம் சக்தி பவனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷரம் சக்தி பவனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சட்ட விவகாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் சீனியர் அதிகாரிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சாஸ்திரி பவனுக்கு சீல் வைக்கப்பட்டது. அவர் கடைசியாக ஏப்.,23ம் தேதி அலுவலகத்திற்கு சென்றுள்ளார், மேலும் மே 1ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


latest tamil news


தலைநகர் டில்லியில் இதுவரை 6,923 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 67, 152 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44,029 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,917 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202016:13:39 IST Report Abuse
ஆப்பு கொரொனா இன்னும் ஒழிக்கலியா? அதுக்குள்ளே ரயிலெல்காம் துடைச்சு ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க? அப்போ எல்லாத்தையும் முடக்கி ரவுண்டு கட்டி அடிச்சு வேலை வெட்டியை ஒழிச்சு இவிங்க மட்டும் தீயா வேலை செஞ்சது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X