பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார ஊழியர்களை கவுரவப்படுத்திய நீலகிரி மாவட்ட நிர்வாகம்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020
Share
Advertisement
நீலகிரி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, மாவட்டநிர்வாகம், ரோஜாபூங்கா, மலர்கண்காட்சி, சுகாதாரபணியாளர்கள், கவுரவம், டாக்டர்கள், நர்சுகள், தூய்மைபணியாளர்கள், கிராமசெவிலியர்கள்,

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோரை கவுரவிக்கும் வகையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர்களை பார்வையிட அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 14 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் அந்த மாவட்டத்தில் டாக்டர்கள், கிராம செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என பல தரப்பினர் கடுமையாக உழைத்தனர். ஆண்டுதோறும் கோடை காலத்தில் வழக்கமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடக்கும். இந்த ஆண்டு, 25ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, 4,000 வகைகளில் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு, மலர்கள் மலர்ந்துள்ளன.

நடப்பாண்டு, 8, 9, 10ம் தேதிகளில், ரோஜா கண்காட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. 124வது மலர் கண்காட்சியை வரும் 15 முதல் 20 வரை நடத்தவும் திட்டமிடப்பட்டது. இதற்காக 250 வகையை சேர்ந்த 5 லட்சம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஆனால், 'கொரோனா' காரணமாக, அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


latest tamil news


இந்நிலையில், கொரோனாவை தடுபபதற்காக உழைத்த டாக்டர்கள், நர்சுகள், கிராம செவிலியர்கள், சுகாதார ஊழியர்களை கவுரவப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அவர்களுக்கு மட்டும், ரோஜா பூங்காவில் உள்ள மலர்களை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுக்கு குழு, குழுவாக சென்று, சமூக இடைவெளியுடன் மலர்களை பார்க்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன்படி இன்று பூங்காவிற்கு வந்த சுகாதார ஊழியர்களை, பூங்கா ஊழியர்கள் மலர் கொடுத்த வரவேற்றனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள சுகாதார ஊழியர்கள் கூறுகையில், கடந்த இரண்டு மாதமாக பயம் மற்றும் மன அழுத்தத்தில் வேலைபார்த்த எங்களுக்கு அதனை போக்கும் வகையில், இது உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மலர்களை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில், எங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது சந்தோஷத்தை அளிக்கிறது என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X