அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரு வாரத்தில் மீதமுள்ள தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர்: இபிஎஸ்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
தமிழகம், முதல்வர், இபிஎஸ், தொழிலாளர்கள், ரயில், TN CM, EPS, Tamil Nadu, Palanisamy, Edappadi K Palaniswami, migrant workers, TN govt, AIADMK, travel ban, lockdown, lockdown extension, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corna news, corona cases, train service

சென்னை: வெளி மாநில தொழிலாளர்கள் 9 ஆயிரம் பேர் இதுவரை ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மீதமுள்ள தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கப்படுவர் என முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழக அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதுவரை 9 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


மீதமுள்ள வெளிமாநில தொழிலாளர்களும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் ஒருவார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அதுவரை வெளி மாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-மே-202021:30:57 IST Report Abuse
தமிழ்வேல் அவங்கள, இன்னும் ஒருவாரத்தில் அனுப்புறதா இருந்தா. அவுங்க அதுக்கு மறுநாளே திரும்பி வர வேண்டி வருமா அல்லது ஊரடங்கு இன்னும் ஒருமாசத்துக்கு நீளுமா ?
Rate this:
Cancel
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
11-மே-202016:07:58 IST Report Abuse
sankaran vaidyanathan சாப்பாட்டுக்கு வழி இல்லாதவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள் .அந்த ஊரில் வேலை வாய்ப்பு இல்லாததால் புலம் பெயர்ந்தவர்கள் சொந்த ஊரில் இழந்த வாழ்வை மீட்டு எடுக்க முடியுமா புகலுவீர்கள் மானிடர்களே . சோழ நாடு சோறுடைத்தது என்பது அந்தக்காலம் .வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு வஞ்சனை செய்வோரோடு இணைந்து வளமை பொலிவு இழந்து தவிக்குது . இயற்கை வளம் அழித்தபிறகு இயல்பு வாழ்க்கை மிளிருமா ? தமிழர் என்ற இனம் உண்டு பண்பு,பாசம் விருந்தோம்பல் இப்பொழுது எங்கே போனது ? மொழி வாரி மாகாணம் ஏற்பட்டதிலிருந்து கல்வி அறிவு குறைந்து ஏழை மக்கள் மிகவும் பாதிக்க பட்டார்கள் . இப்பொழுது மத வாத ஆட்சியில் மனித நேயம் மறந்து போச்சு வளம் போச்சு வாழ்வு போச்சு இளைஞர்களின் கனவு சிறகடித்து பறந்துவிட்டது நாடு என்ன செய்கிறது என்பதை விட நாம் நாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் என்பது கேள்வி கேள்விக்குறியாகி விட்டது . சுவாமி விவேகானந்தர் சொற்கள் நினைவு க்கு வருகிறது 'விழிமின் எழுமின் ஏற்றம் பெறு '
Rate this:
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
11-மே-202015:20:27 IST Report Abuse
P Karthikeyan வெளிமாநில மக்கள் செல்லட்டும். டாஸ்மாக் கடைகளில் நின்ற தமிழர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளுங்கள். இனி தமிழ் மண்ணில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை. உடனே இங்கு ஒரு நரி ஊளையிடும் பாருங்கள்..வந்தேறி என்று
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-மே-202015:29:10 IST Report Abuse
Janarthananஉன் தமிழன் ஓசி குடி/சினிமா /பிரியாணி என்ற போதையில் வேலை செய்வதை நிறுத்தியதால் தானே வெளியில் இருந்து தொழிலார்கள் வந்து உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்...
Rate this:
11-மே-202016:33:51 IST Report Abuse
chandran, pudhucherry ஓசி பிரியாணி குவாட்டர் கட்டிங் இல்லையா இனிமே தமிழன் உழைத்துதான் சாப்பிடனுமா. தமிழின விரோதியே...
Rate this:
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
11-மே-202018:46:46 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் கார்த்திகேயன் சொன்னமாதிரி அரேபியாவில் இருந்து எங்கள் ஆட்களை தவிர மற்றவர்கள் வெளி ஏறு என்று சொல்லி விட போகிறார்கள் என்று பாவம் இன்று தூக்கம் போச்சு...
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-மே-202001:35:26 IST Report Abuse
தமிழ்வேல் ஜனா, உன்னை போல வெளிநாட்டில குப்பை கொட்ட போனதாலதான் வெளி மாநிலத்திலிருந்து வேலைக்கு வர்றானுவோ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X