ஊரடங்கு உத்தரவால் நிறுத்தப்பட்ட விவசாய பணிகள் மீண்டும் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவால் நிறுத்தப்பட்ட விவசாய பணிகள் மீண்டும் துவக்கம்

Added : மே 11, 2020
Share

கரூர்: ஊரடங்கு உத்தரவு காரணமாக, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தப்பட்ட, விவசாய பணிகள் மீண்டும் துவங்கின.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த மார்ச், 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரும், 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், சில தொழில் நிறுவனங்கள், கட்டட தொழில்கள், அரசு ஒப்பந்த பணிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில், விவசாய பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. குறிப்பாக, குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன், 12 ல் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், கரூர், தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டார பகுதிகளில் விவசாயிகள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அமராவதி ஆற்றுப்பகுதிகளான, அரவக்குறிச்சி, க.பரமத்தி வட்டார பகுதிகளில் மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு மற்றும் காய்கள், கீரைகள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் களை எடுக்கும் பணியை, விவசாயிகள் துவக்கி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X