பொது செய்தி

தமிழ்நாடு

வெங்கமேடு சுற்று வட்டார பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை தீவிரம்

Added : மே 11, 2020
Share
Advertisement

கரூர்: வெங்கமேடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மதுபாட்டில்கள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, 95 மதுபான கடைகளும் மூடப்பட்டன. ஆனால், கரூர் நகரில் முக்கிய ஓட்டல்களில், வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மது சப்ளை நடந்தது. மேலும், மாவட்டம் முழுவதும் சந்து கடைகளிலும் மதுவிற்பனை ஜோராக நடந்தது. அதில், ஈடுபட்ட ஐந்து டாஸ்மாக் ஊழியர்கள், கைது செய்யப்பட்டு பிறகு, ஜாமினில் விடப்பட்டனர். இந்நிலையில் கடந்த, 7ல் மாநிலம் முழுவதும், டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. அதற்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு, சென்னை உயர்நீதிமன்றம் மதுபான கடைகளை மூட கடந்த, 8 ல் மாலை உத்தரவிட்டது. இதனால், நேற்று முன்தினம் முதல், மாநிலம் முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், கரூர் நகரத்தையொட்டியுள்ள வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில், மதுபாட்டில்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெங்கமேடு பகுதியில், அதிகளவில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை குறிவைத்து, மதுவிற்பனை தாராளமாக நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த, 7 ல் மதுபான கடைகள் திறக்கப்பட்ட பிறகு, கரூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான வெங்கமேட்டில், மதுபாட்டில்கள் விற்பனை நடப்பதால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X