பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டில் தவித்த இந்தியர்கள் தாய்நாடு திரும்பினர்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement


பெங்களூரூ: கொரோனா ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் தவித்த இந்தியர்கள் தற்போது மத்திய அரசின் முயற்சியால் தாய்நாடு திரும்பி வருகின்றனர். இருப்பினும் இந்தியா வந்து சேர்கின்றவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.



latest tamil news



உலகில் கொரோனாவால் நவம்பர் முதல் உலகம் முழுவதும் பாதிப்நு துவங்கியது. கடந்த மார்ச் 25 முதல் இந்தியாவில் முழு ஊரடங்கு காரணமாக ரயில், விமான சேவைகள் அடியோடு பாதிக்கப்பட்டன. இதனால் வெளிமாநிலங்கள் போல், வெளிநாடுகளிலும் பலரும் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் சிறிது இயல்பு வாழ்வு மாற துவங்கி உள்ளது. வெளிமாநில தொழிலாளர்களை சிறப்பு ரயிலில் அழைத்து சென்றதுபோல், வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானங்கள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி பிரிட்டன், மலேசியா, நியூயார்க்கில் இருந்து பலர் முதல் பல்வேறு நாடுகளில் இருந்து பலரும் இந்தியா திரும்பி வருகின்றனர். லண்டனில் இருந்து 326 பேர் கர்நாடக மாநிலம் ஏர் இந்திய சிறப்பு விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தனர். இன்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 112 பேர் ஐ தராபாத் விமான நிலையம் வந்து அடைந்தனர்.பலரும் தாய்மண்ணை தொட்டு வணங்கினர். உறவினர்கள் சமூக விலகல்படி நின்று வரவேற்றனர்.


latest tamil news


தோகாவில் இருந்து கேரளா வந்து சேர வேண்டிய விமானம் தொழில்நுட்ப காரணமாக வரும் மே.12 ம் தேதி கிளம்பும் என்று கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - kailasa,இந்தியா
11-மே-202016:33:25 IST Report Abuse
Tamilan இன்னமும் நிறைய மக்கள் காத்திருக்கிகிறார்கள் .......இன்னமும் நிறைய விமானம் இயக்கினால் நல்லது
Rate this:
Cancel
saravan - bangaloru,இந்தியா
11-மே-202016:06:38 IST Report Abuse
saravan velinaattil thavithukondiruppavarkalil 0.001% mattume vanthullanar, naankal ellam yaar
Rate this:
Cancel
EZHIL MARAN - jeddah ,சவுதி அரேபியா
11-மே-202015:14:41 IST Report Abuse
EZHIL MARAN இது வெறும் சிறிய வரவு மற்ற வெளிநாடு வாழ் மக்கள் எல்லோரும் காத்து கிடக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X